Skip to main content

மதம் மாறிய சிம்புவின் தம்பி....! விளக்கமளித்த டி.ஆர் 

Published on 16/02/2019 | Edited on 16/02/2019
kuralarasan

 

இயக்குனர் டி.ராஜேந்தரின் இளைய மகன் குறளரசன் 'சொன்னால்தான் காதலா', 'காதல் அழிவதில்லை' உள்ளிட்ட சில படங்கள் மூலம் குழந்தை நட்சத்திரமாகவும், சிறுவனாகவும் அறிமுகமானார். இதையடுத்து இவர் சிம்பு - நயன்தாரா இணைந்து நடித்த 'இது நம்ம ஆளு' படத்தின் இசையமைப்பாளராகவும் அறிமுகமானார். இந்நிலையில் குறளரசன் தன் பெற்றோர்கள் முன்னிலையில் இன்று இஸ்லாம் மதத்திற்கு மாறினார். இவர் இஸ்லாம் மதத்தில் மாறும் வீடியோ பதிவு ஒன்று தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றது. 

 

 

மேலும் இது குறித்து விளக்கமளித்த தந்தை டி.ராஜேந்தர்.... "குறளரசனுக்கு சிறு வயதிலிருந்தே இஸ்லாம் மார்க்கத்தின் மீது இஷ்டம். தற்போது, இஸ்லாத்தை முழுமையாக ஏற்றுக்கொண்டார். நானும் எம் மதமும் சம்மதம், ஒன்றே குலம் ஒருவே தேவன் என்ற கொள்கையை கடைப்பிடிப்பவன் என்பதால் இதற்கு ஆதரவு தெரிவித்தேன். மேலும் எனது சிம்பு சினி ஆர்ட்ஸ் நிறுவனத்தின் எம்பளத்தில் அனைத்து மதத்தின் குறியீடுகளையும் கொண்டுதான் வடிவமைதந்துள்ளேன். என் மகன் குறளரசன் மக்கா மசூதி ஜமாத்தார் முன்னிலையில் குறள் இஸ்லாத்துக்கு மாறினார். அவர்  விருப்பத்துக்கேற்ப பெயர் ஒன்றை வைத்துக்கொள்ளவும் ஜமாத்தில் கூறியுள்ளனர்" என்றார்.

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

‘விமர்சனம்; விமோசனம்’ - தனது ஸ்டைலில் பதிலளித்த டி. ராஜேந்தர்

Published on 03/02/2024 | Edited on 03/02/2024
t.rajendar about vijay political entry

விஜய் தனது மக்கள் இயக்கத்தை அரசியல் கட்சியாக மாற்றியுள்ளார். தமிழக வெற்றி கழகம் எனத் தனது கட்சிக்கு பெயர் வைத்துள்ளதாக அறிவித்த விஜய், அதை இந்திய தலைமைத் தேர்தல் ஆணையத்திலும் பதிவு செய்ய விண்ணப்பித்துள்ளார்.

கட்சி பெயர் அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, தமிழகம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் கட்சி நிர்வாகிகள் கேக் வெட்டியும், பட்டாசு வெடித்தும் கொண்டாடினர். மேலும் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி மகிழ்ந்தனர். இது ஒருபுறம் இருக்க, விஜய்க்கு அரசியல் தலைவர்கள், திரைப் பிரபலங்கள் எனப் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

அந்த வகையில் இயக்குநரும் நடிகருமான டி. ராஜேந்தர், செய்தியாளர்கள் கேள்விகளுக்குப் பதிலளிக்கையில், “அரசியல் என்பது பொது மொழி. யார் வேண்டுமானாலும் கட்சி தொடங்கலாம். விஜய் வரட்டும். அவருக்கு எனது வாழ்த்துக்கள். அவரை பற்றிய கேள்விக்கு இப்போது நான் பண்ணவில்லை விமர்சனம். கடவுள்கிட்ட கேட்கிறதெல்லாம் தமிழ்நாட்டு மக்களுக்கு வேண்டும் விமோசனம்” என்றார்.  

Next Story

திடீரென மயக்கமடைந்த டி.ராஜேந்தர் !

Published on 30/12/2023 | Edited on 30/12/2023
TRajender fainted suddenly in tuticorin

கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி ஆகிய தென் மாவட்டங்களில் பல இடங்களில் அண்மையில் கனமழை பெய்தது. இதனால் தாழ்வான பகுதிகளில் வெள்ள நீர் சூழ்ந்து மக்கள் தவித்தனர். பல்வேறு இடங்களில் போக்குவரத்து சேவையும் பாதிக்கப்பட்டது. அதே சமயம் தொடர் கனமழை எதிரொலியாக குடியிருப்பு பகுதிகள், சாலைகள், ரயில் நிலையம் என அனைத்து இடங்களிலும் வெள்ள நீர் சூழ்ந்ததால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. பாதிப்புக்குள்ளான தென்மாவட்ட மக்களுக்கு தமிழக அரசு உட்பட பலரும் தனிப்பட்ட முறையில் உதவி செய்து வருகின்றனர். 

அந்த வகையில் திரை பிரபலம் டி.ராஜேந்தர் தூத்துக்குடிக்குச் சென்று பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்து நிவாரணம் வழங்கினார். அப்போது திடீரென்று மயக்கம் ஏற்பட்டு கீழே விழு பார்த்தார். உடனே அருகில் இருந்தவர்கள் அவரை பிடித்து இருக்கையில் உட்காரவைத்து, முகத்தில் தண்ணீர் தெளித்து சரிப்படுத்தினர். இருப்பினும் அவரை அருகில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றதாக கூறப்படுகிறது.