Skip to main content

‘கோலிவுட்டின் ராஜா’ அஜித் - யூ-ட்யூப் நிறுவனம்

Published on 13/06/2019 | Edited on 13/06/2019

அஜித் நடித்து ஆகஸ்ட் 10ஆம் தேதி ரிலீஸாக இருக்கும் படம் நேர்கொண்ட பார்வை. இப்படத்தின் ட்ரைலர் நேற்று மாலை ஆறு மணிக்கு வெளியாகி  யூ-ட்யூப், ட்விட்டர் என அனைத்து சமூக வலைதளங்களிலும் டெர்ண்டானது. 
 

ajith

 

 

பாலிவுட்டில் அமிதாப், டாப்ஸி நடிப்பில் வெளியான படம்  ‘பிங்க்’. மூன்று பெண்களுக்கு நடந்த அநீதியை பற்றி பேசும் இப்படம், ஹிந்தி ரசிகர்களிடம் செம ஹிட் அடித்தது. இதனை தொடர்ந்து அந்த படத்தை தமிழில் ரீமேக் செய்ய ரீமேக் உரிமையை வாங்கினார் போனி கபூர். ஸ்ரீதேவி முன்பு ஒருமுறை அஜித்தை வைத்து படம் ஒன்றை தயாரிக்க ஆர்வம் காட்டினாராம். பிங்க் படம் பார்த்த பின்பு அஜித்தை வைத்து தமிழில் ரீமேக் செய்தால் நன்றாக இருக்கும் என தன்னுடைய விருப்பத்தை போனிகபூரிடம் தெரிவிக்க தற்போது அதை நிறைவேற்றியுள்ளார் போனி கபூர். தமிழில் அமிதாப் கதாபாத்திரத்தில் அஜித் நடிக்க, டாப்ஸி கதாபாத்திரத்தில் ஷ்ரத்தா ஸ்ரீநாத் நடித்திருக்கிறார்.
 

இந்நிலையில் நேற்று இப்படத்தின் ட்ரைலர் வெளியாகி பட்டி தொட்டி எங்கும் வைரலாகி கொண்டிருக்க யூ-ட்யூப் நிறுவனத்தின் இந்திய ட்விட்டர் பக்கத்தில், கோலிவுட்டின் ராஜா அஜித் என்று குறிப்பிட்டு இப்படத்தின் ட்ரைலரை பகிர்ந்துள்ளது.

 

சார்ந்த செய்திகள்