Skip to main content

விஷால் வெளியிடும் பிரமாண்ட கன்னட படம் 

Published on 09/11/2018 | Edited on 09/11/2018
kgf

 

ஹோம்பேல் பிலிம்ஸ் சார்பில் விஜய் கிரகண்டுர் தயாரிப்பில், கன்னட நாயகன் ராக்கிங் ஸ்டார் யாஷ் நாயகனாக நடித்து, கன்னடத்தில் ரூ.80 கோடி செலவில் பிரம்மாண்டமாக உருவாகியிருக்கும் படம் 'கே.ஜி.எஃப்'. பிராஷாந்த் நீள் இயக்கியுள்ள இப்படத்தில் ஸ்ரீநிதி ஷெட்டி நாயகியாக அறிமுகமாகிறார். வசிஸ்டா என்.சிம்ஹா, ரம்யா கிருஷ்ணன், மாளவிகா அவினாஷ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்த சரித்திர படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா இன்று நடந்தது. இதில் படக்குழுவினர் மற்றும் திரையுலகினர் பங்கேற்றனர். இப்படம் தமிழ், தெலுங்கு, மலையாம், ஹிந்தி உள்ளிட்ட 5 மொழிகளில் ஒரேநேரத்தில் வெளியாகிறது. இந்நிலையில் தமிழில் இந்த படத்தை நடிகர் விஷால் தன் சொந்த தயாரிப்பு நிறுவனமான விஷால் பிலிம் பேக்டரி மூலம் வெளியிடுகிறார். மேலும் இதுகுறித்து நடிகர் விஷால் பேசும்போது...

 

 

 

"இந்த படத்தின் மூலம் கன்னட சினிமா அடுத்த கட்டத்திற்கு செல்லும் என்பதில் சந்தேகமில்லை. இந்த மாதிரியான ஒரு படத்தில் தானும் ஒரு பங்காக இருக்க வேண்டும் என்பதற்காக தான் இந்த படத்தை வாங்கி வெளியிடுகிறேன்" என்றார். 1951ல் நடந்த இந்த கதை தங்கச் சுரங்கத்தை கண்டுபிடிப்பதை மையப்படுத்தி உருவாகி இருக்கிறது. மும்பையில் வளரும் யாஷ், தங்கச் சுரங்கத்திற்குள் சென்று அங்கு அடிமையாய் இருக்கும் மக்களை காப்பாற்றும் கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். படம் வருகிற டிசம்பர் 21ஆம் தேதி வெளியாகவுள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்