Skip to main content

கேரள அரசின் அங்கீகாரம் - அதிக விருதுகள் பெற்ற ஆடுஜீவிதம்

Published on 16/08/2024 | Edited on 16/08/2024
kerala state awards aadujeevitham grabs high numbers of awards

54-ஆவது கேரள மாநில திரைப்பட விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. இதைக் கேரள மாநில கலாசாரத்துறை அமைச்சர் சாஜி செரியன் வெளியிட்டார். இதில் பிரித்விராஜ் - பிளஸ்ஸி கூட்டணியில் வெளியான ஆடுஜீவிதம் படம் 9 விருதுகளை வென்றுள்ளது. மலையாள இலக்கியத்தில் மிகவும் பிரபலமான மற்றும் விற்பனையில் சாதனை படைத்த  ‘ஆடு ஜீவிதம்’ நாவலைத் தழுவி அதே தலைப்பில் வெளியான இப்படம் நல்ல வரவேற்பை பெற்றது குறிப்பிடத்தக்கது. விருது பெற்ற படங்களின் விவரம்.

சிறந்த படம் - காதல் தி கோர்

சிறந்த நடிகர் - பிரித்விராஜ் சுகுமாரன் (ஆடுஜீவிதம்)

சிறந்த நடிகை - ஊர்வசி (உள்ளொழுக்கு), பீனா ஆர் சந்திரன் (தடவு)

சிறந்த இயக்குநர் - ப்ளெஸ்ஸி (ஆடுஜீவிதம்)

சிறந்த படம் (2ம் இடம்) - இரட்டா (ரோகித் எம்.ஜி.கிருஷ்ணன்)

சிறந்த குழந்தை நடிகர் (ஆண்) – அவிர்த் மேனன் – பாச்சுவும் அத்புத விளக்கும்

சிறந்த குழந்தை நடிகர் (பெண்) - தென்னல் அபிலாஷ் - சேஷம் மைக்கேல் பாத்திமா

சிறந்த குணச்சித்திர நடிகர் - விஜயராகவன் (பூக்காளம்)

சிறந்த குணச்சித்திர நடிகை - ஸ்ரீஷ்மா சந்திரன் (பொம்பளை உரிமை)

சிறந்த பின்னணி பாடகர் – வித்யாதரன் மாஸ்டர் (ஜனனம் 1947, பிரணயம் தொடருன்னு)

சிறந்த பின்னணி இசை - மேத்யூஸ் புலிக்கல் (காதல் - தி கோர்)

சிறந்த இசையமைப்பாளர் - ஜஸ்டின் வர்கீஸ் (சாவர்)

சிறந்த திரைக்கதை தழுவல் - பிளெஸ்ஸி (ஆடுஜீவிதம்)

சிறந்த அறிமுக இயக்குநர் - ஃபாசில் ரஸாக் (தடவு)

சிறந்த டப்பிங் கலைஞர் (ஆண்) - ரோஷன் மேத்யூ - உள்ளொழுக்கு, வாலாட்டி

சிறந்த டப்பிங் கலைஞர் (பெண்) - சுமங்கலா - ஜனனம் 1947, ப்ரணயம் தொடருன்னு

சிறந்த ஆடை வடிவமைப்பு - ஃபெமினா ஜாபர் - ஓ பேபி

சிறந்த திரைக்கதை - ரோஹித் எம்ஜி கிருஷ்ணன் (இரட்டா)

சிறந்த பாடல் வரிகள் - ஹரிஷ் மோகனன் ( ‘செந்தாமர பூவில்...’ - சாவேர்)

சிறந்த ஒப்பனை கலைஞர் - ரஞ்சித் அம்பாடி (ஆடுஜீவிதம்)

சிறந்த ஒலி வடிவமைப்பு - ஜெயதேவன் சக்கடத், அனில் ராதாகிருஷ்ணன் (உள்ளொழுக்கு)

சிறந்த படத்தொகுப்பு - சங்கீத் பிரதாப் (லிட்டில் மிஸ் ராவுத்தர்)

சிறந்த கலை இயக்குநர் - மோகன்தாஸ் (2018)

சிறந்த விஎஃபெக்ஸ் - ஆண்ட்ரூ டி க்ரூஸ், விஷக் பாபு (2018)

சிறந்த நடன இயக்குநர் - ஜிஷ்னு (சுலேகா மன்ஸில்)

சிறந்த பெண் / திருநர் சமுகத்துக்கான விருது (நடுவர் குழு தேர்வு) - இயக்குநர் ஷாலினி உஷாதேவி (என்னென்னும்)

சிறப்பு விருது (சினிமா கலையில் பிரமாதமான பங்களிப்பு) - ககனாச்சாரி

சிறப்பு விருதுகள் – கே.ஆர்.கோகுல் (ஆடுஜீவிதம்), கிருஷ்ணன் (ஜைவம்), சுதி கோழிக்கோடு (காதல்: தி கோர்)

சார்ந்த செய்திகள்