நடனப்புயல் பிரபுதேவா வித்யாசமான கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் படம் மெர்குரி. கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் சைலண்ட் த்ரில்லராக உருவாகி இருக்கும் இப்படம் வரும் 13ஆம் தேதி வெளியாகும் என்று முன்னர் அறிவிக்கப்பட்டது. தற்போது படஅதிபர்கள் போராட்டத்தால் தமிழ்நாட்டில் புதுபடங்கள் ஏதும் ரிலீசாகாத நிலையில் இப்படத்தின் டிரைலரை சமீபத்தில் வெளியிடுவதாக இயக்குனர் அறிவித்தார். பின்னர் அது காவிரி பிரச்சனைக்காக கைவிடப்பட்டது. இதையடுத்து தற்போது மெர்குரி படத்தை தமிழ் தவிர்த்து மற்ற மொழிகளில் வெளியிட கார்த்திக் சுப்புராஜ் முடிவு செய்துள்ளார். இப்படம் குறித்த நாளில் தமிழ் தவிர்த்து மற்ற மொழிகளில் வெளியாகும் என்று ட்விட்டரில் கார்த்திக் சுப்புராஜ் தெரிவித்துள்ளார். இந்நிலையில், கார்த்திக் சுப்புராஜின் அந்த டுவிட்டுக்கு டிக் டிக் டிக் பட தயாரிப்பாளர் ஹிதேஷ் ஜபக் கண்டனம் தெரிவித்து ட்விட்டரில் பதிவிட்டுருந்தாவது...."ஒவ்வொரு தயாரிப்பாளரும் அவர்களது படத்திற்காக உழைத்து வருகிறார்கள். மெர்குரி படத்தை விட டிக் டிக் டிக் 3 மடங்கு செலவு அதிகமான படம். சைலண்ட் த்ரில்லர் படத்திற்கு ஏது மொழி. அதை அவர் தமிழில் மட்டும் ரிலீஸ் செய்ய மாட்டேன் என கூறுவது ஏற்கமுடியாதது. நாங்களும் எங்களது படத்தை ரிலீஸ் செய்ய காத்திருக்கிறோம். சில வேலைகள் மட்டுமே பாக்கி இருக்கிறது. தயாரிப்பாளர்கள் வேலைநிறுத்தம் முடிந்த பிறகு படத்தின் வேலைகள் துவங்கி படம் விரைவில் ரிலீசாகும்" என்று தெரிவித்துள்ளார்.
Published on 06/04/2018 | Edited on 07/04/2018