ரஜினிகாந்த் - கார்த்திக் சுப்புராஜ் கூட்டணியில் உருவாகும் படத்திற்கு 'பேட்ட' என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ள மோஷன் போஸ்டர் நேற்று வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. மேலும் தற்போது வரை இந்த வீடியோ சுமார் 1.5 மில்லியன் பார்வையாளர்கள் கண்டுகளித்து சாதனை செய்து வருகிறது. மேலும் சமூகவலைத்தளங்களில் தற்போது வரை ட்ரெண்டிங்கில் இருந்து வருகிறது. இந்நிலையில் இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இதுகுறித்த ஒரு வீடியோ ஒன்றை வெளியிட்டு பேசியபோது....
"இந்த நாள் என் வாழ்க்கையில் முக்கியமான நாள். நான் சின்ன வயதில் இருந்து ரஜினியின் விசிறி. அவரைப் பார்த்துதான் வளர்ந்தேன். நான் சினிமாவில் வருவதற்கு மிக முக்கிய காரணம் ரஜினிதான். அவரை வைத்து இயக்குவது என்னுடைய கனவு. அது நிறைவேறி இருக்கிறது. இதன் படப்பிடிப்பு சிறப்பாக சென்று கொண்டிருக்கிறது. தன்னுடைய ஸ்டைலில் கலக்கி வருகிறார். 'பேட்ட' படத்தின் பர்ஸ்ட் லுக் மோஷன் போஸ்டர் பார்க்கும் போது ரசிகர்களுக்கு கண்டிப்பாக பிடிக்கும். சீக்கிரமே படத்தை முடித்து, சீக்கிரமே தியேட்டருக்கு வருகிறோம். ரசிகர்கள் அனைவரும் ரஜினி படத்தை கொண்டாடுவோம்" என்றார்.