ஸ்ரீ சிவகுமார் கல்வி அறக்கட்டளையின் 43-வது ஆண்டு பரிசளிப்பு விழா சென்னையில் நடைபெற்றது. அந்த நிகழ்வில் சிவகுமார், கார்த்தி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். அப்போது கார்த்தி பேசுகையில், "என்னுடைய இரண்டு வயதிலிருந்து இந்த விழாவை பார்த்துக்கொண்டிருக்கிறேன். 1979-ல் அப்பா இந்த அறக்கட்டளையை ஆரம்பித்தார். அடுத்த ஆண்டிலிருந்து பரிசு கொடுக்க ஆரம்பித்தார்கள். இதற்காக அப்பா தந்து ஒரு படத்தின் முழு சம்பளத்தை வங்கியில் (fixed deposit) போட்டு அதிலிருந்து வருகிற வட்டி பணத்தை வைத்து பரிசு தொகையை கொடுக்க ஆரம்பித்தார்கள். ஆரம்பத்தில் ரூ.2,500 முதல் தொடங்கி 25-வது வருடம் முடியும் போது ஐம்பதாயிரம் ரூபாயாக உயர்த்திருந்தார்கள்.அதன்பிறகு அகரம் அறக்கட்டளை இந்த பரிசளிப்பு விழாவை தத்தெடுத்தது.
இன்றைக்கு கிட்டத்தட்ட 6 லட்சம் ரூபாய் வரை மாணவர்களுக்கு பரிசு அளித்தி வருகிறோம். இங்கு உள்ள முக்கால்வாசி மாணவர்களுக்கு அப்பா கிடையாது என்று எல்லாரும் சொன்னார்கள். எங்க அப்பாக்கும் அப்படிதான். அவருக்கும் அப்பா கிடையாது. அம்மா தான் சிரமப்பட்டு படிக்க வச்சிருக்காங்க. மாதம் 80 ரூபாய், அந்த பணத்தை அனுப்புவதே பெரிய விஷயம். அப்பாவின் சொந்தக்காரர்களின் உதவி மூலமாக அவரும் கஷ்டப்பட்டு வந்தவர். அப்பா பெரிய கனவு மற்றும் உழைப்பு இல்லாமல் இருந்திருந்தால் அனேகமாக நாங்களும் கஷ்டப்பட்டு தான் இருந்திருப்போம். அதாவது ஊரில் இருந்திருப்போம் ஏதோ ஒரு மில் வேலைக்கு போயிட்டு இருந்திருப்போம். படிக்க வச்சிருக்க முடியுமா என தெரியாது. எனவே நான் இங்கு துவண்டுபோக மாட்டோம் நான் எழுந்து வருவேன் என நம்பிக்கை வைத்தால் வந்துரமுடியும் என்பதற்கு அப்பாதான் பெரிய உதாரணம்.
அவர் ஒவ்வொரு தடவையும் எங்களுக்கு சொல்லிக்கொடுப்பது இதுதான். ஒரு இரயில் நிலையத்திற்கு சென்றால் கூட முன்னதாக போர்ட்டர்கள் (பெட்டி தூக்குபவர்கள்) இருப்பார்கள். இப்போதெல்லாம் இரயில் நிலையத்திற்கு போவதே அரிதாகிவிட்ட்டது. ஒரு பெட்டி தூக்கிட்டு போனால் 50 ரூபாய் கேப்பார்கள். எனக்கு, 20 ரூபாய் கேட்கிற இடத்தில் 50 ரூபாய் கேட்குகிறார்களே என்று ஆச்சிரியமாக இருக்கும். ஆனால் அப்பா, பரவாயில்லை வா என்று சொல்லி 100 ரூபாய் கொடுப்பார். நான் ஏன் அதிகமாக கொடுக்கிறீர்கள் என்று கேட்டேன். அதற்கு அப்பா, அவரு 100 ரூபாய் வச்சி என்ன வீடா கட்டிடுவார். இந்த ஒரு நாள் வேலை கிடைப்பதே அவருக்கு பெரிய விஷயம். 100 ரூபாய் கூடுதலாக கிடைத்தால் குழந்தைகளுக்கு ஸ்வீட் அல்லது சாப்பாடு வாங்கி கொடுப்பார் என்று சொன்னார்.
இது போன்ற சிந்தனைகளை சின்ன வயதிலிருந்தே வளர்த்தது அப்பா தான். அந்த வகையில் பணம் சந்தோஷமே கொடுக்காது என சொல்வார்கள். அது பொய். அடுத்தவங்களுக்கு கொடுத்தா ரொம்ப சந்தோசம் கொடுக்கும். அது போல் அடுத்தவங்களுக்கு கொடுக்கறப்போ சந்தோசம் நிறைய இருக்கு. நம்மிடம் இருந்து மற்றவர்களிடம் போகும் போது அந்த பணத்தின் மதிப்பு ரொம்ப அதிகமாகிறது என சிறுவயதில் சொல்லி கொடுப்பார்" என்று பேசினார்.