Skip to main content

"போதைப்பொருளைத் தடுக்க அரசாங்கம் இதை ஊக்குவிக்க வேண்டும்" - கார்த்தி கோரிக்கை

Published on 24/06/2023 | Edited on 24/06/2023

 

karthi speech in no cannabis awarness function

 

காவல் துறையினர் சார்பில் சென்னை மெரினா கடற்கரையில் போதைப் பொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் கார்த்தி கலந்து கொண்டு பேசினார். அவர் பேசுகையில், "1 வருடத்துக்கு முன்னால் கூல் லிப் பற்றி பேசியிருந்தேன். பெற்றோர் எல்லாம் கூல் லிப் என்றால் என்ன வென்று கேட்கிறார்கள். யாருக்குமே அதை பற்றி எந்த ஐடியாவும் இல்லை. ஆனால் ஸ்கூல் பசங்க கிட்ட கேட்டால், என் ஃபிரண்ட் போடுவான்...ஜில்லுனு இருக்கும் என்று சொல்கிறார்கள். நான் பேசிய வீடியோ கமெண்ட் செக்சஷனில்,  கூல் லிப் போட்டுக்கிட்டு தான் இந்த வீடியோவை பார்ப்பதாக எழுதியுள்ளார்கள். அந்தளவுக்கு பெற்றோரை விட பசங்க எல்லா விஷயமும் தெரிந்து வைத்துள்ளார்கள். 

 

இது எல்லாம் எங்க ஆரம்பிக்கிதுன்னு யோசித்துப் பார்த்தால் மாலை பொழுது நேரத்தில் தான். நாமெல்லாம் அந்த நேரத்தில் குடும்பத்தோடு இருப்போம் அல்லது கிரிக்கெட் விளையாட போவோம். அது ரெண்டுமே இப்போது இல்லை. மாலை நேரத்தில் ஃபோனில் கேம் விளையாடிக் கொண்டிருக்கிறார்கள். கேம் விளையாடி, கேம் விளையாடி வெளியே போனால் என்ன பண்ணுவது என்று தெரியவில்லை என எல்லோரும் சொல்கிறார்கள். எப்போது முதல் தடவை கூலிப் போட்ட என கேட்டால் ஃபிரண்டு கொடுத்தான்...ட்ரை பண்ணினேன் என்கிறார்கள். மேலும் அந்த வயதில் எல்லாத்தையும் ட்ரை பண்ணனும் என தோன்றும். அதனால் நானும் ட்ரை பண்ணினேன் என் சாதாரணமாக சொல்கிறார்கள். 

 

முன்பெல்லாம் காலேஜ் படிக்கும் பசங்க தான் தண்ணி அடிக்கிறார்கள் என சொல்வார்கள். ஆனால் இப்போது ஸ்கூலில் இருந்தே அது தொடங்கிவிட்டது என்கிறார்கள். அதை கேட்கையில் ரொம்ப வருத்தமா இருக்கு. நிறைய வீரம் இருக்கு, அதை எங்கே காண்பிக்கிறது, இவ்ளோ விஷயம் இருக்கா அப்போ இதை ட்ரை பண்ணலாம் என எல்லாரும் ட்ரை பண்றதா சொல்கிறார்கள். அது மிகவும் ஆபத்தான நிலையை நோக்கி இழுத்துச்செல்லும். போதைப்பொருள் பயன்படுத்திய நேரம் மட்டும் கிக் கொடுக்காமல் அதை தாண்டி மூலையை மழுங்கடித்து விடுகிறது. அது தான் பிரச்சனை. மேலும் சிந்தனை இல்லாமல் ஆக்குகிறது.  

 

ஸ்கூல் பக்கத்திலே போதைப்பொருள் கிடைக்கும் சூழல் இருக்கிறது. அதை யார் விற்கிறார்களோ அவர்கள் நமக்குள்ள இருக்குறவங்க தான். வாங்கி பயன்படுத்துகிறவர்களும் நமக்குள்ள இருக்குறவங்க தான். அதனால் நாம் அனைவரும் சேர்ந்தால் தான் ஒரு சின்ன மாற்றத்தை உருவாக்க முடியும். அதற்கு விளையாட்டு ஒரு முக்கியமான விஷயமாக பார்க்கிறேன். நம்ம அரசாங்கமும் விளையாட்டை ரொம்ப ஊக்குவிக்க வேண்டுமென கேட்டுக்கொள்கிறேன்" என்றார்.  

 

 

சார்ந்த செய்திகள்