Skip to main content

கரோனா தொற்று இல்லாமல் ஒரு மாதத்தைக் கடந்த மாவட்டம்! - நடிகர் கார்த்தி பாராட்டு!

Published on 16/05/2020 | Edited on 16/05/2020

 

hrd

 

கரோனா வைரஸ் தொற்றின் தீவிரம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே வருகிறது. தமிழகத்தில் இதுவரை 10,000த்திற்கும் மேற்பட்டோர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதிலும் குறிப்பாகச் சென்னையில் மட்டும் இதுவரை 6,000த்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
 


இதற்கிடையே சமீபத்தில் கரோனா தொற்று இல்லாத மாவட்டமாக ஈரோடு உருவானதற்கு ஈரோடு மாவட்ட ஐ.பி.எஸ். சங்கத்தினர் ஆட்சியரையும், காவல் துறையையும் பாராட்டி சமூகவலைத்தளத்தில் பாராட்டினர். இந்நிலையில் ஐ.பி.எஸ். சங்கத்தினரின் பாராட்டைக் குறிப்பிட்டு நடிகர் கார்த்தி சமூகவலைத்தளத்தில் வாழ்த்து பதிவிட்டுள்ளார். அதில்... "சிகப்பு மண்டலமாக இருந்து பச்சை மண்டலமாக மாறிய முதல் மாவட்டம் ஈரோடுதான். புதிதாகத் தொற்று ஏற்பட்டவர்கள் இன்றி 32 நாட்கள் கடந்துள்ளது. இந்த மகத்தான சாதனையை நிகழ்த்திய அனைத்து அதிகாரிகள், காவல் துறை, மருத்துவர்கள், பராமரிப்பு வழங்குபவர்கள் மற்றும் தூய்மைப் பணியாளர்கள் ஆகியோருக்கு ஒரு பெரிய வணக்கம்'' எனப் பதிவிட்டுள்ளார்.

 


 

சார்ந்த செய்திகள்