சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா நடிப்பில் உருவாகி வரும் படம் ‘கங்குவா’. இப்படத்தில் கதாநாயகியாக பிரபல பாலிவுட் நடிகை திஷா பதானி நடிக்க, யோகி பாபு, கிங்ஸ்லி, கோவை சரளா, ஆனந்த்ராஜ் உள்ளிட்ட பலர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். 3டி முறையில் சரித்திரப் படமாக 10 மொழிகளில் வெளியாக உள்ள இப்படத்தை, ஸ்டூடியோ கிரீன் மற்றும் யுவி கிரியேஷன்ஸ் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கின்றன. தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கும் இப்படம் அடுத்த வருடத் தொடக்கத்தில் வெளியாகவுள்ளது.
இப்படத்தின் பணிகள் முழு வீச்சில் நடந்து வருகிறது. படத்தின் கிளிம்ப்ஸ் வீடியோ சூர்யாவின் பிறந்தநாளான நேற்று வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. மேலும் யூட்டியூபில் தற்போது வரை 22 மில்லியன் பார்வையாளர்களைக் கடந்து ட்ரெண்டிங் லிஸ்டில் முதல் இடத்தில் உள்ளது.
இந்நிலையில் இப்படத்தின் கிளிம்ப்ஸ் குறித்து சூர்யாவின் தம்பியும், நடிகருமான கார்த்தி, "சிவா சார், அண்ணாவின் பிறந்தநாளில் இந்த கிளிம்ப்ஸ் ஒரு சிறந்த பரிசு. படப்பிடிப்புத் தளத்தில் இருக்கும் சில புகைப்படங்களையும் பார்த்தேன்" எனக் குறிப்பிட்டு, சும்மா தெறிக்குது என்ற தொனியில் ஃபயர் எமோஜியைப் பதிவிட்டிருந்தார். மேலும், படத்திற்காக ஆவலுடன் காத்திருப்பதாகப் பதிவிட்டிருந்தார். கார்த்தியின் இந்தப் பதிவு படத்திற்கு இன்னும் எதிர்பார்ப்பை அதிகரிக்கச் செய்துள்ளது.
இயக்குநர் சிவா, தமிழில் கார்த்தி நடித்த சிறுத்தை படத்தின் மூலம் அறிமுகமானார். இப்படம் நல்ல வரவேற்பைப் பெற, அவர் சிறுத்தை சிவா என அழைக்கப்பட்டு வருவது நினைவுகூரத்தக்கது.
. @directorsiva sir #Kanguva glimpse was a superb gift on Anna’s birthday. Saw some stills from the spot too… summa🔥🔥🔥 Eagerly waiting... #KanguvaGlimpse - https://t.co/Gj1TZzTUkD pic.twitter.com/OSZNdr1Fea— Karthi (@Karthi_Offl) July 24, 2023