Skip to main content

பிரபல பாலிவுட் நடிகைகளுக்கு கரோனா தொற்று!

Published on 13/12/2021 | Edited on 13/12/2021

 

kareena kapoor and amrita arora test positive covid19

 

பிரபல பாலிவுட் நடிகைகளான கரீனா கபூர் மற்றும் அமிர்தா அரோரா ஆகிய இருவரும் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.  நெருங்கிய நண்பர்களான இவர்கள் கரோனா விதிமுறைகளை பின்பற்றாமல் மும்பையில் பல பார்ட்டிகளில் கலந்து கொண்டுள்ளனர்.  சமீபத்தில் கரண் ஜோகர் வீட்டில் நடந்த ரீயூனியன் பார்ட்டியில்  கரீனா கபூர் மற்றும் அமிர்தா அரோரா ஆகிய  இருவரும் கலந்து கொண்டுள்ளனர். இவர்களுடன் பாலிவுட் நடிகைகள் மலைக்க அரோரா, ஆலியா பட், கரிஷ்மா கபூர், நடிகர்கள் அர்ஜுன் கபூர் உள்ளிட்ட பலரும் பங்கேற்று இருந்தனர்.

 

இந்நிலையில் கரீனா கபூர் மற்றும் அமிர்தா அரோரா ஆகிய  இருவருக்கும் தற்போது கரோனா தொற்று உறுதி  செய்யப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து இவர்களுடன் தொடர்பில் இருந்த அனைவரையும் பரிசோதனைக்கு உட்படுத்த மும்பை முனிசிபல் கார்ப்பரேஷன் உத்தரவிட்டுள்ளது. 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

"கண்களின் கலவரத்தில் காணாமல் போனேன்" - பிரபல நடிகைக்கு வைரமுத்து வாழ்த்து

Published on 25/09/2023 | Edited on 25/09/2023

 

vairamuthu wishes kareena kapoor

 

சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருந்து வரும் பாடலாசிரியர் வைரமுத்து, அதில் சமூகப் பிரச்சனைகளுக்கு கருத்துகளையும், தனது அடுத்த படத்தின் அப்டேட்டுகள் மற்றும் திரை அனுபவங்களையும், அவ்வப்போது தான் பார்த்த திரைப்படங்கள் பற்றியும் பகிர்ந்து வருகிறார். 

 

அந்த வகையில் தற்போது பாலிவுட் நடிகை கரீனா கபூரை பாராட்டியுள்ளார். இது தொடர்பாக அவரது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், "நேற்று ஒரேமூச்சில் பார்த்த படம் ஜானே ஜான். கணவன் கயவன் பெண் குழந்தையோடு தப்பித்து வாழும் கரீனா கபூரை மீண்டும் உறவாடித் துரத்துகிறது. அந்த உரிமைப் பேய் தாயும் மகளும் தப்பிக்கும் போராட்டத்தில் அவன் கொல்லப்படுகிறான். பிறகுதான் தொடங்குகிறது. புத்தி பொத்தி விளையாடும் அந்தத் திகில் திருவிழா, தர்க்கம் தப்பாத திரைக்கதை. உங்கள் கண்களின் கலவரத்தில் காணாமல் போனேன் கரீனா. வங்காள விரிகுடாவிலிருந்து வாழ்த்துகிறேன்." என குறிப்பிட்டுள்ளார். 

 

வைரமுத்து தற்போது குஞ்சுமோன் தயாரிக்கும் ஜென்டில்மேன் 2, பாலா இயக்கும் வணங்கான், தங்கர் பச்சான் இயக்கும் 'கருமேகங்கள் ஏன் கலைகின்றன' உள்ளிட்ட சில படங்களில் பாடலாசிரியராகப் பணியாற்றி வருகிறார். 

 

 

Next Story

அதிகரிக்கும் கொரோனா தொற்று; மீண்டும் தொடங்கிய தடுப்பூசி உற்பத்தி!

Published on 13/04/2023 | Edited on 13/04/2023

 

covid infection increased again started covershield vaccination 

 

இந்தியாவில் கொரோனா பாதிப்பு தற்போது கணிசமாக உயர்ந்து வரும் நிலையில், இந்தியா முழுவதும் உள்ள அனைத்து மாநிலங்களும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. மேலும் அரசு மருத்துவமனைகள் கொரோனாவை தடுப்பதற்குத் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன.

 

இந்நிலையில் மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள புனேவில் அமைந்துள்ள சீரம் நிறுவனம் கோவிட் தொற்றுக்கான தடுப்பூசியான கோவிட்ஷீல்டை உற்பத்தி செய்து வந்த நிலையில், இந்தியாவில் கொரோனா தொற்று குறைந்து வந்ததால் கடந்த 2021 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் தடுப்பூசி உற்பத்தி செய்வதை நிறுத்தியது.

 

தற்போது இந்தியாவில் மீண்டும் கொரோனா தொற்று அதிகரித்து வரும் வேளையில் மீண்டும் கோவிஷீல்ட் தடுப்பூசி உற்பத்தியைத் தொடங்கியுள்ளதாக சீரம் நிறுவனத்தின் சிஇஓ அடார் பூனவல்லா தெரிவித்துள்ளார்.