ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு ‘தலைவி’ என்கிற தலைப்பில் படமாகிறது. கிரீடம், தலைவா, தெய்வத் திருமகள் உள்ளிட்ட படங்களை இயக்கிய ஏ.எல். விஜய் தான் இப்படத்தை இயக்குகிறார். ஜெயலலிதா கதாபாத்திரத்தில் பாலிவுட்டின் முன்னணி நடிகை கங்கனா ரணாவத் நடிக்கிறார். ஜெயலலிதாவின் வாழ்க்கையில் சினிமா, அரசியல் என்று பல்வேறு கட்டங்கள் இருப்பதால், ரணாவத் நான்கு காலகட்டங்களில் நான்கு தோற்றங்களில் வருகிறார்.
இந்த எம்.ஜி.ஆர். வேடத்தில் அரவிந்த சாமி நடிக்கிறார். இப்படத்தில் ஜெயலலிதாவுடன் நடித்துள்ள பிரபல நடிகர்களின் கதாபாத்திரங்களும் இடம்பெற உள்ளன. அந்த வகையில் தெலுங்கு நடிகரும், ஆந்திராவின் முன்னாள் முதல்வருமான என்.டி.ஆர் காதாபாத்திரத்தில் நடிக்க வைக்க அவரது பேரன் ஜூனியர் என்.டி.ஆரிடம் படக்குழு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டது. ஆனால், ஜூனியர் என்.டி.ஆர் அந்த கதாபாத்திரத்தில் நடிக்கவே மாட்டேன் என்று திட்டவட்டமாக சொல்லிவிட்டதாக தகவல் வெளியானது.
மறைந்த முன்னாள் தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் மூன்றாம் ஆண்டு நினைவு தினம் தமிழகம் முழுவதும் அனுசரிக்கப்படுகிறது.
இந்நிலையில் ஜெயலலிதாவின் வாழ்க்கையை படமாக எடுக்கும் தலைவி படக்குழுவும் ஷூட்டிங்கை சிறிது நேரம் நிறுத்தி வைத்து மௌன அஞ்சலி செலுத்திவிட்டு, ஜெயலலிதாவின் உருவபடத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர். ஜெயலலிதாவாக நடிக்கும் பாலிவுட் நடிகை கங்கனா ரணாவத்தும் ஜெயலலிதாவின் உருவ படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.