மும்பையில் பிறந்து அமெரிக்காவில் வசித்து வருபவர் பிரபல எழுத்தாளர் சல்மான் ருஷ்டி. கடந்த 1988 ஆம் ஆண்டு இவர் எழுதிய சாத்தனின் வேதங்கள்(Satanic Verses) என்ற புத்தகம் இஸ்லாமிய நாடுகளில் பெரும் சர்ச்சையை கிளப்பியது. இந்த நூலில் இஸ்லாமியர்களுக்கு எதிரான கருத்துக்கள் இருப்பதாக கூறி இஸ்லாமிய நாடுகள் சல்மான் ருஷ்டிக்கு எதிராக கடும் போராட்டங்கள் நடத்தப்பட்டன. இதற்கு எல்லாம் ஒரு படி மேலே சென்று ஈரானின் அப்போதைய மன்னரான அயதுல்லா கொமேனி ஃபத்வா என்ற மத ஆணையை வெளியிட்டார். இதனை தொடர்ந்து பயங்கரவாதிகளின் தொடர் மிரட்டல் காரணமாக வெளிநாடுகளில் பதுங்கி வாழ்ந்து வந்தார்.
இதனிடையே சல்மான் ருஷ்டியின் தலைக்கு 2.8 மில்லியன் அமெரிக்க டாலர் பரிசு அறிவிக்கப்பட்ட நிலையில், ஆறு ஆண்டுகள் கழித்து மேற்கு நியூயார்க்கில் இலக்கிய நிகழ்வில் பங்கேற்ற சல்மான் ருஷ்டி மர்ம நபரால் கழுத்தில் கத்தியால் குத்தப்பட்டார். இதனைத் தொடர்ந்து உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.
இந்நிலையில் சல்மான் ருஷ்டி கத்தியால் குத்தப்பட்டதற்கு நடிகை கங்கனா கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்ட சமூக வலைதள பதிவில், " ஜிஹாதிகளின் மற்றொரு பயங்கரமான செயல். சாத்தானின் வேதங்கள் அதன் காலத்தின் மிகச்சிறந்த புத்தகங்களில் ஒன்றாகும்… நான் வார்த்தைகளால் சொல்ல முடியாத அளவுக்கு அதிர்ச்சியடைந்தேன்" எனத் தெரிவித்துள்ளார்.