Skip to main content

கரோனா விதிமுறையை மீறிய கமல்ஹாசன் 

Published on 06/12/2021 | Edited on 06/12/2021

 

Kamal Haasan broke the corona rule

 

நடிகர் கமல்ஹாசனுக்கு கடந்த சில வாரங்களுக்கு முன்பு கடுமையான சளி, இருமல் ஏற்பட்டதையடுத்து தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு பரிசோதனை மேற்கொண்டதில் கரோனா இருப்பது உறுதியானது. இதனைத் தொடர்ந்து சிகிச்சை பெற்றுவந்த அவர்,  கடந்த சனிக்கிழமை (04.12.2021) முழுவதுமாக குணமடைந்து வீடு திரும்பினார். இதையடுத்து அன்று நடந்த பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டார்.

 

ad

 

இந்நிலையில், நடிகர் கமல் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டது குறித்து விளக்கம் கேட்கப்படும் என சுகாதாரத்துறைச் செயலாளர் கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் அளித்த பேட்டியில், "கரோனா சிகிச்சையிலிருந்து குணமடைந்த நபர், 7 நாட்கள் தனிமையில் இருக்க வேண்டும்  என விதிமுறை உள்ளது. ஆனால் அதை மீறி நடிகர் கமல்ஹாசன் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டது குறித்து அவரிடம் விளக்கம் கேட்கப்படும்" எனத் தெரிவித்துள்ளார்.

 

 

சார்ந்த செய்திகள்