
ராணா கிரியேஷன்ஸ் தயாரிப்பில் புதுமுக நடிகர்கள் சாமி, திவாகர், அஞ்சு நடிப்பில் விரைவில் திரைக்கு வரவிருக்கும் படம் 'களவாணி சிறுக்கி'. வரும் அக்டோபர் 5ஆம் தேதி தமிழகம் முழுவதும் திரைக்கு வரும் இப்படத்தை காண வரும் ரசிகர் கூட்டத்தை அதிகரிக்க பட தயாரிப்பாளர் ஆர்.நமச்சிவாயம் புது யுக்தி ஒன்றை கையாளவுள்ளார். அதன்படி படம் வெளியாகும் 5,6,7 ஆகிய தேதிகளில் காலை காட்சிக்கு மட்டும் திரைக்கு வரும் ரசிகர்களுக்கு ஒரு டிக்கெட்க்கு ஒரு விலையுர்ந்த 143 பிராண்ட் கைலி ஒன்றை பரிசாக தர திட்டமிட்டுள்ளார்.இதன் மூலம் ரசிகர்களும் அதிகமாக திரையரங்கிற்கு வருவார்கள் படமும் வெற்றிபெறும் என்ற நம்பிக்கையுடன் உள்ளார் தயாரிப்பாளர் ஆர்.நமச்சிவாயம். இப்படத்தை தமிழகம் முழுவதும் ட்ரீம் சினிமாஸ் நிறுவனம் வெளியிடுகிறது.