Skip to main content

சித்ரா தேவிப்ரியாவுக்காக வருத்தப்படுறேன் - காஜல் அகர்வால்

Published on 20/03/2023 | Edited on 20/03/2023

 

 KajalAgarwal interview

 

விரைவில் வெளிவரவிருக்கும் 'கோஸ்டி' படத்தின் நாயகி காஜல் அகர்வாலை நக்கீரன் ஸ்டூடியோ சார்பாக சந்தித்தோம். அப்போது அவர் தனது திரையுலக அனுபவம் பற்றி பகிர்ந்து கொண்டார்.

 

இந்த நிலையில் நான் இருப்பதற்குக் காரணம் கடவுளின் ஆசி. என்னுடன் பணியாற்றிய தொழில்நுட்பக் கலைஞர்கள், நடிகர்கள், ரசிகர்கள் அனைவருடைய அன்பும் என்னை இன்னும் அதிகம் பணியாற்றத் தூண்டுகிறது. சென்னை எனக்கு மிகவும் பிடித்த இடம். இது என்னுடைய இரண்டாவது தாய் வீடு. கலாச்சாரம், உணவு, மக்கள் என்று இங்குள்ள அனைத்தும் எனக்குப் பிடிக்கும். இயக்குநர் கல்யாண் மிகவும் தெளிவான சிந்தனையுடையவர். இந்தப் படத்தில் பணியாற்றியது மகிழ்ச்சியான அனுபவம்.

 

முதல் படமான லட்சுமி படத்தில் நடிப்பது சவாலாக இருந்தது. அப்போது எனக்கு மொழி உட்பட தென்னிந்தியா குறித்து எதுவும் தெரியாது. மகதீரா படத்தில் ராஜமவுலி சாரோடு பணியாற்றியது எனக்கு மிகச் சிறந்த அனுபவமாக இருந்தது. துப்பாக்கி படம் எனக்கு மிகவும் பிடித்த படம். விஜய் சார், முருகதாஸ் சாரோடு அந்தப் படத்தில் பணியாற்றியது மறக்க முடியாத அனுபவம். துப்பாக்கி இரண்டாம் பாகம் எடுத்தால் அதில் நிச்சயம் நான் நடிப்பேன். அஜித் சார் அற்புதமான மனிதர். அவருடைய சமையலை ஒருநாள் நான் சாப்பிட வேண்டும் என்று விரும்புகிறேன். இந்தியன் 2 படத்தில் கமல் சார், ஷங்கர் சாரோடு பணியாற்றி வருகிறேன். ஷங்கர் சார் இவ்வளவு பெரிய இடத்தை அடைந்தது அவருடைய உழைப்பால் தான் என்பதை நேரில் பார்த்து வியந்து வருகிறேன். கமல் சார் ஒரு லெஜன்ட்.

 

சமந்தா, ரகுல், தமன்னா ஆகியோர் என்னுடைய மிக நெருங்கிய நண்பர்கள். சினிமாவுக்கும் குடும்பத்துக்கும் ஒரு சேர நேரம் செலவிடுவது சவாலான காரியம் தான். ஆனால் இரண்டையும் ஒருவர் விரும்பினால் அது நிச்சயம் சாத்தியம். நான் வாழ்க்கையில் முயற்சி செய்த பெரும்பாலான விஷயங்கள் வெற்றி பெற்றுள்ளன. ஆல் இன் ஆல் அழகுராஜா படத்தில் வரும் சித்ரா தேவிப்ரியாவுக்கு நடந்தது மாதிரி எனக்கு ஏமாற்றங்கள் நடந்ததில்லை. பாவம் அந்த கேரக்டர். அதற்காக நான் வருத்தப்படுகிறேன் என்றார்.


 

சார்ந்த செய்திகள்