Skip to main content

இரண்டு மாநிலத் தொழிலாளர்களுக்கு நிதியுதவி அளித்த காஜல் அகர்வால்!

Published on 17/04/2020 | Edited on 17/04/2020


கரோனா வைரஸ் தொற்றால் இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. இதனால் தினக்கூலியை நம்பியுள்ள பணியாளர்களின் வாழ்வாதாரம் மிகவும் மோசமாகியுள்ளது. மேலும் சினிமாத்துறையில் வேலையில்லாமல் கஷ்டப்படும் தினக்கூலிப் பணியாளர்களுக்கு ஃபெப்சியின் வேண்டுகோளுக்குப் பின் சினிமா பிரபலங்கள் உதவி வருகின்றனர். 

 

hfh

 

அந்தவகையில் தமிழ், தெலுங்கு ஆகிய இரண்டு மொழிகளிலும் முன்னணி நடிகையாக இருக்கும் காஜல் அகர்வால், ஐஸ்வர்யா ராஜேஷ் மற்றும் நயன்தாராவைத் தொடர்ந்து தற்போது 2 லட்சம் ரூபாய் நிதியுதவியை கரோனா வைரஸ் பரவலால் வேலையில்லாமல் பாதிக்கப்பட்ட ஃபெப்சி தமிழ்த் திரைப்படத் தொழிலாளர்களுக்கு வழங்கினார். மேலும் கரோனா வைரஸ் நிவாரணத் தொகையாக தெலுங்கு சினிமா தொழிலாளர்களுக்கு 2 லட்சமும், பிரதம மந்திரியின் நிவாரண நிதிக்கு 1 லட்சமும், மஹாராஷ்ட்ரா மாநில முதல்வரின் நிவாரண நிதிக்கு 1 லட்சமும் வழங்கியுள்ளார். மேலும் மும்பையில் தான் வசிக்கும் பகுதியில் அருகளிலுள்ள மக்களுக்கு உணவு மற்றும் தானியங்கள் வழங்கினார். இதுதவிர, பீட்டாவுடன் இணைந்து விலங்குகளைத் தத்தெடுத்தும் உணவளித்தும் உதவி செய்து வருகிறார் நடிகை காஜல் அகர்வால்.

 


 

சார்ந்த செய்திகள்