
மெர்சல் படத்தின் வெற்றிக்கு பிறகு தற்போது ஹிந்தி வெற்றி பெற்ற குயின் பட ரீமேக்கில் நடித்து வருகிறார் நடிகை காஜல் அகர்வால். பாரிஸ் பாரிஸ் என்ற பெயரில் உருவாகும் இப்படத்தை நடிகர் ரமேஷ் அரவிந்த் இயக்குகிறார். இந்நிலையில் காஜல் அகர்வால் நடிகைகளின் பாதுகாப்பை பற்றி ஒரு பேட்டியில் பேசுகையில்...."நடிகையாக இருப்பதை பாதுகாப்பு இல்லாததுபோல் உணர்கிறீர்களா....என்று பலர் என்னிடம் கேட்கிறார்கள். என்னை பெற்றோர்கள் தைரியமாக வளர்த்து உள்ளனர். எதற்கும் பயப்பட மாட்டேன். ஆனாலும் நடிகைகளுக்கு பொது இடங்களில் சில நேரங்களில் அசவுகரியங்களும் ஏற்பட்டு விடுகின்றன. நாங்கள் ரசிகர்களை சந்தோஷப்படுத்த உழைக்கிறோம். எங்கள் உணர்வுகளை ரசிகர்கள் புரிந்து கொள்ள வேண்டும். நடிகைகளுக்கு தனிப்பட்ட வாழ்க்கை இருக்கிறது. ஆனாலும் அவர்களால் பொது இடத்தில் சுதந்திரமாக நடமாட முடியவில்லை. பெயர் புகழுக்காக சுதந்திரத்தை தியாகம் செய்ய வேண்டி உள்ளது. எனக்கு எதிரான விமர்சனங்களை நான் கண்டு கொள்வது இல்லை. அவர்களுக்கு பதில் சொல்லி மோத விரும்ப மாட்டேன். சாதாரண பெண்ணாக இருந்திருந்தால் எனது வாழ்க்கை சிறிய உலகத்துக்குள் அடங்கி இருக்கும். நடிகையானதால் உலக அளவில் பெரிய அறிமுகம் கிடைத்து இருக்கிறது. சிலர் சினிமா தொழிலை கேவலமாக பேசுகிறார்கள். எல்லா துறையிலும் நல்லதும் கெட்டதும் இருக்கிறது. கெட்ட நோக்கில் பார்ப்பவர்களுக்கு கெட்டது தான் தெரியும். நான் சினிமா துறையை மதிக்கிறேன்" என்றார்.