Skip to main content

விஜயை தொடர்ந்து தற்போது விஜய் சேதுபதியும்.....

Published on 24/03/2018 | Edited on 26/03/2018
vijaysethupathi


கடந்த 16ஆம் தேதி முதல் சினிமா தயாரிப்பாளர்கள் ஸ்டிரைக் காரணமாக அனைத்து படப்பிடிப்புகளும் நிறுத்தப்பட்ட நிலையில் ஏற்கனவே நடைபெற்ற விஜய் படம் உள்பட 4 படங்களுக்கு சிறப்பு அனுமதி வழங்கப்பட்டு படப்பிடிப்புகள் நடைபெற்றன. இதன் காரணமாக திரையுலகில் சலசலப்பு ஏற்பட்ட நிலையில் இதற்கான விளக்கத்தை தயாரிப்பாளர் சங்க செயலாளர் துரைராஜ் கடந்த 20ஆம் தேதி தெரிவித்தார். இந்நிலையில் நேற்று (23ஆம் தேதி) முதல் வெளியூர், வெளிநாட்டு படப்பிடிப்புகளும் நிறுத்தப்படும் என்று ஏற்கனவே தயாரிப்பாளர்கள் அறிவித்துள்ளனர். இதனால் பல படங்களின் வெளிநாட்டு படப்பிடிப்புகள் தள்ளிவைக்கப்பட்ட நிலையில் விஜய் சேதுபதி நடிக்கும் 'ஜுங்கா' படத்தின் படப்பிடிப்புக்காக விஜய் சேதுபதி, சாயிஷா, இயக்குனர் கோகுல் உள்ளிட்ட படக்குழுவினர் போர்ச்சுக்கல் நாட்டுக்கு சென்று இருக்கிறார்கள். அங்கு தொடர்ந்து 10 நாட்கள் படப்பிடிப்பு நடத்தவும் திட்டமிட்டுள்ளனர். இதையடுத்து வேலை நிறுத்தம் நடைபெறும் நேரத்தில் 'ஜுங்கா' படக்குழுவினர் படப்பிடிப்புக்காக போர்ச்சுக்கல் சென்று இருப்பதும் தற்போது விமர்சனத்துக்கு உள்ளாகி இருக்கிறது. இதையடுத்து இதற்கு விளக்கமளித்த படக்குழு, ஏற்கனவே  குறிப்பிட்ட தேதியில் போர்ச்சுக்கல் செல்ல விமான டிக்கெட், படப்பிடிப்பு அனுமதி ஆகியவை பெறப்பட்டு இருப்பதால் படக்குழு போர்ச்சுகல் நாட்டிற்கு புறப்பட்டு சென்று இருப்பதாக அறிவித்துள்ளனர்.

சார்ந்த செய்திகள்