
இசைத் துறையில் பணியாற்றும் கலைஞர்களுக்கான உயரிய விருதாக கருதப்படும் கிராமி விருது ஆண்டுதோறும் வழங்கப்படுவது வழக்கம். அந்த வகையில் இந்த ஆண்டுக்கான 64 வது கிராமி விருது வழங்கும் விழா அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடைபெற்று. 86 பிரிவுகளில் விருது வழங்கப்பட்டுள்ள இவ்விழாவில் இந்தியாவின் முன்னணி இசையமைப்பாளர் ஏ.ஆர் ரஹ்மான் தனது மகனுடன் கலந்து கொண்டார்.
இவ்விழாவில் பிரபல பாடகர் மற்றும் பாடலாசிரியரான ஜான் பேட்டிஸ்ட், 5 கிராமி விருதுகளை வென்றுள்ளார். அவருடைய “க்ரை..” என்ற பாடலுக்கு 2 விருதும், “ஃப்ரீடம்..”, “வீ ஆர்...”, ஆகிய ஆல்பம் பாடல்களுக்கு தலா ஒரு விருதும், “சோல்..” படத்தில் அவருடைய பங்களிப்பிற்காக 1 கிராமி விருதும் சேர்த்து மொத்தம் 5 விருதுகள் வழங்கப்பட்டுள்ளன. இதன் மூலம் ஆல்பம் பாடல் பிரிவில் 14 வருடங்களுக்கு பிறகு ஒரு கறுப்பினத்தவருக்கு கிராமி விருது கிடைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.