Skip to main content

ஜெயலலிதா பயோபிக்கில் நடிக்க திட்டவட்டமாக மறுத்த பிரபல நடிகர்...

Published on 22/11/2019 | Edited on 22/11/2019

ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு ‘தலைவி’ என்கிற தலைப்பில் படமாகிறது. கிரீடம், தலைவா, தெய்வத் திருமகள் உள்ளிட்ட படங்களை இயக்கிய ஏ.எல். விஜய் தான் இப்படத்தை இயக்குகிறார். ஜெயலலிதா கதாபாத்திரத்தில் பாலிவுட்டின் முன்னணி நடிகை கங்கனா ரணாவத் நடிக்கிறார். ஜெயலலிதாவின் வாழ்க்கையில் சினிமா, அரசியல் என்று பல்வேறு கட்டங்கள் இருப்பதால், ரணாவத் நான்கு காலகட்டங்களில் நான்கு தோற்றங்களில் வருகிறார். 
 

kangana ranaut

 

 

இந்த எம்.ஜி.ஆர். வேடத்தில் அரவிந்த சாமி நடிக்கிறார். இப்படத்தில் ஜெயலலிதாவுடன் நடித்துள்ள பிரபல நடிகர்களின் கதாபாத்திரங்களும் இடம்பெற உள்ளன. அந்த வகையில் தெலுங்கு நடிகரும், ஆந்திராவின் முன்னாள் முதல்வருமான என்.டி.ஆர் காதாபாத்திரத்தில் நடிக்க வைக்க அவரது பேரன் ஜூனியர் என்.டி.ஆரிடம் படக்குழு முயற்சிகள் மேற்கொண்டுள்ளது.

ஆனால், அந்த கதாபாத்திரத்தில் தான் நடிக்க மாட்டேன் என்று திட்டவட்டமாக மறுத்துவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இவர் தற்போது ராஜமௌலி இயக்கத்தில் பிரம்மாண்ட படமாக உருவாகி வரும் ஆர் ஆர் ஆர் படத்தில் நடித்து வருகிறார்.

 

 

சார்ந்த செய்திகள்