சென்னையில் நடைபெற்ற 'லோக்கல் சரக்கு' திரைப்படத்தின் இரண்டாவது சிங்கிள்ஸ் வெளியிட்டு விழாவில் கலந்துகொண்டு பேசிய நடிகர் சாம்ஸ், "ஜப்பான் மொழியில் ஒரு விஷயம் கூறுவார்கள். நமது வாழ்க்கையில் பிடித்த விஷயத்தை நாம் செய்யும் போதும், அதை பெருவாரியான மக்களுக்கு பிடிக்கக் கூடிய விஷயமாக இருக்கிறதும், அதை தொழிலாக எடுத்துக் கொண்டால் வாழ்க்கையில் மிகப்பெரிய மகிழ்ச்சியோடு வாழ்வாய். சிறு வயதில் இருந்தே தயாரிப்பாளர் சுவாமிநாதன் ராஜேஷ், இந்த இசைக்காகவே தன்னை அர்ப்பணித்துள்ளார். இசையமைப்பாளராக வர வேண்டும் எனபதே அவருடைய லட்சியமாக இருக்கிறது. பிடித்த விஷயத்தை செய்து கொண்டிருப்பதால் கண்டிப்பாக இவர் வாழ்க்கையில் மிகப்பெரிய நபராக வருவார்.
சொல்லிக்கொள்ளும் படியான ஒரு அட்டகாசமான இசையமைப்பாளராக இருப்பார். 'கண்ணால மைக்குரியே செம்ம கட்டையா...' என்கின்ற குத்து பாடலும், 'உன்னவிட்டா எனக்கு யாரும் இல்ல...' என்கின்ற மெலோடி பாடலும் நன்றாக இருக்கிறது. இந்த இரண்டு பாடல்களையும் மிக அழகாக கொடுத்திருக்கிறார். இவர் கண்டிப்பாக ஜெயிப்பார்.சிறு வயதிலிருந்தே இசை மீது ஆர்வமுள்ள ராஜேஷ், இசையமைப்பாளர் சங்கர் கணேஷ் சாரிடம் பல வருடமாக இசையைப் பயின்றிருக்கிறார். சங்கர் கணேஷ் சார் ராஜேஷுக்குள் இசையைத் திணித்திருக்கிறார்.
இந்தியைத் திணித்தால் தான் தப்பு. இசையைத் திணித்தால் தவறில்லை. என்னை கேட்டால் ஆங்கிலம் திணித்தாலே தவறு என்பேன். 200 வருடங்களுக்கு முன்பு தமிழர்கள் ஆங்கிலமின்றி, தமிழை மட்டும் வைத்துக்கொண்டு செல்வ செழிப்புடன் வாழ்ந்திருக்கிறார்கள். நான் இந்த படத்தில் காமெடியில் இரண்டு சீன்களில் நடித்துள்ளேன். கண்டிப்பாக, இந்த படம் மிகப்பெரிய வெற்றியைப் பெற வேண்டும். இந்த படம் வெற்றிப் பெற எனது மனமார்ந்த வாழ்த்துகள்" எனக் கூறினார்.