இன்றைய தலைமுறை தங்கள் நேரத்தை அதிகம் செலவழிக்கும் ஒரு விஷயம் என்றால் அது சமூகவலைத்தளங்கள் தான். பொதுமக்கள் தங்களது பொழுதை போக்க ஃபேஸ்புக், ட்விட்டர், இன்ஸ்டாகிராம் போன்ற செயலிகளை பயன்படுத்தி வருகின்றனர். ஆனால் உலக அளவில் பிரபலமாக இருக்கும் செலபிரிட்டிகள் இதன்மூலம் கோடிக்கணக்கில் பணம் சம்பாதித்து வருகின்றனர்.
அப்படி உலக அளவில் சமூகவலைத்தளங்கள் மூலம் அதிக பணம் சம்பாதிக்கும் 100 பிரபலங்களின் பட்டியலை ஃபோர்ப்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ளது. அதன்படி பிரபல அமெரிக்க மாடலான கைலி ஜென்னர் இந்த பட்டியலில் முதலிடத்தில் உள்ளார். இவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிடும் ஒரு விளம்பர பதிவிற்கு இந்திய மதிப்பில் சுமார் 8.7 கோடி ரூபாய் சம்பாதிக்கிறார்.
ஃபோர்ப்ஸ் வெளியிட்டுள்ள இந்த பட்டியலில் இரண்டே இரண்டு இந்தியர்கள் மட்டுமே இடம்பிடித்துள்ளனர். அதில் முதலில் இருப்பவர் பிரியங்கா சோப்ரா. இவர் தனது ஒரு இன்ஸ்டாகிராம் போஸ்ட் மூலம் 1.87 கோடி ரூபாய் சம்பாதிக்கிறார். அதேபோல இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் கோலி ஒரு இன்ஸ்டாகிராம் போஸ்ட் மூலமாக 1.35 கோடி ரூபாய் சம்பாதிக்கிறார். உலகம் முழுவதும் உள்ள பிரபலங்கள் தாங்கள் விளம்பர தூதராக உள்ள நிறுவனங்களின் தயாரிப்புகள் குறித்து பதிவுகளை போடுவதன் மூலம் இந்த வருமானத்தை அவர்கள் பெறுகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
முதல் 25 இடங்களை பிடித்த பிரபலங்களின் பட்டியல் விவரம்:
கெய்லி ஜென்னர்
அரியனா கிராண்டே
கிறிஸ்டியானா ரொனால்டோ
கிம் கதார்சியன்
செலினா கோம்ஸ்
டுவைன் ஜான்சன்
பியோனஸ் நோல்ஸ்
டெய்லர் ஸ்விஃப்ட்
நெய்மர் ஜூனியர்
ஜஸ்டின் பைபர்
நிக்கி மினாஜ்
லியோனல் மெஸ்ஸி
கெண்டல் ஜென்னர்
க்ளோ கர்தாஷியன்
கெவின் ஹார்ட்
டெமி லொவாடோ
டேவிட் பெக்காம்
லெப்ரான் ஜேம்ஸ்
பிரியங்கா சோப்ரா
ரொனால்டோ டி அசிஸ் மொரேரா
கரேத் பேல்
ஸ்லாடன் இப்ராஹிமோவிக்
விராட் கோலி
லூயிஸ் சுவாரஸ்
கோனார் மெக்ரிகோர்