Skip to main content

இந்தியன் 2 படம் கைவிடப்பட்டதா...? 

Published on 09/05/2020 | Edited on 09/05/2020

 

hjtht

 

'இந்தியன் 2' படத்தின் படப்பிடிப்பு கடந்த ஜனவரி மாதம் சில தவிர்க்க முடியாத காரணங்களால் நிறுத்தப்பட்டது. இதையடுத்து கமல்ஹாசன் தேர்தல் வேலைகளில் பிஸியாகிவிட்டார். மேலும் பட்ஜெட் விவகாரத்தில் இயக்குநர் ‌ஷங்கருக்கும், தயாரிப்பு நிறுவனமான லைகாவுக்கும் பிரச்சினை ஏற்பட்டது. இதனால் படத்தைக் கைவிட்டுவிட்டதாக கூறப்பட்டது. இதையடுத்து தடைபட்ட படப்பிடிப்பு பல்வேறு பேச்சுவார்த்தைகளுக்குப் பிறகு மீண்டும் தொடங்கி நடைபெற்று வந்த நிலையில் கடந்த பிப்ரவரி 19ஆம் தேதி நடந்த படப்பிடிப்பில் கிரேன் அறுந்து விழுந்ததில் 3 பேர் பலியானார்கள். 

 

படப்பிடிப்புத் தளத்தில் நடந்த இந்தத் திடீர் விபத்து காரணமாகப் படப்பிடிப்பு முழுமையாகப் பாதிக்கப்பட்டு பாதியில் நின்றது. இந்த விபத்து தொடர்பாக கமல்ஹாசனுக்கும், லைகா நிறுவனத்துக்கும் இடையே உரசல் ஏற்பட்டது. கடிதம் மூலமாக ஒருவரை ஒருவர் மாறி மாறி குற்றம்சாட்டி வந்தனர். இந்நிலையில் இந்தியன் 2 படம் கைவிடப்பட்டதாகச் சமீபகாலமாகச் செய்திகள் பரவிய நிலையில், இந்தியன் 2 படம் குறித்து பரவும் செய்தி உண்மையல்ல. அது வெறும் வதந்தி. தற்போது 60 சதவீத படப்பிடிப்பு முடிந்துள்ளது. ஊரடங்கு முடிந்த பின் மீதமுள்ள படப்பிடிப்பு தொடங்கும் என லைகா நிறுவனம் அறிவித்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

 

சார்ந்த செய்திகள்