Skip to main content

டைரக்டர் சொல்றத கேக்குறதுதான் என் வேலை, அதுக்குதான் சம்பளம் -சத்தியராஜ் சார் சொல்லும்போது எப்படி இருந்துச்சு தெரியுமா?

Published on 11/09/2018 | Edited on 11/09/2018

பாடகர், தற்போது இயக்குனர் அருண்ராஜா காமராஜ் ‘கனா’ திரைப்படம் குறித்தும், சிவகார்த்திகேயன் உடனான நட்பு குறித்தும் நக்கீரனுடன் பகிர்ந்துகொண்டார். 

 

arunraj

 

 

கனாவின் ஆரம்ப புள்ளி எங்க தொடங்கியது அதைப்பற்றி சொல்லுங்க?

 

கனாக்கு முன்னாடி நிறைய கதை எழுதி வச்சியிருந்தேன் அதையெல்லாம் சொன்னா யாராவது டைட்டிலை ரிஜிஸ்டர் பண்ணிடுவாங்க, நிறைய டைட்டில் அந்த மாதிரி போய்டுச்சு அதனால்தான் யார்கிட்டயும் சொல்றதில்ல.  கனா வரதுக்கு முன்னாடி ஒவ்வொரு பாட்டும் வெளிய வந்து ஹிட் ஆகும்போது எல்லாம், சிவா ஃபோன் பண்ணி எப்போ டைரக்டர் ஆகப் போறேன்னு கேப்பாரு. தயாரிப்பாளர் கிடைச்சா ஆகிடவேண்டியதுதான்னு நானும் சொல்லுவேன். இந்த மாதிரி ஒருவாட்டி பேசிட்டு இருக்கும்போது 'உன் கிட்ட இருக்க ஸ்டோரி லைன் ஏதாவது சொல்லு'னு கேட்டாரு. அப்போ என் கிட்ட இருந்த லைன் எல்லாம் சொன்னேன். எல்லாம் கேட்டுட்டு ‘எல்லாம் சரி ஆனா இதையெல்லாம் ஒரு அசிஸ்டன்ட்  டைரக்டரா இருந்து சொன்னா ஓ.கே. ஆனா, இப்போ நீ பாட்டு பாடி பெரிய ஹீரோ அளவுக்கு இருக்க. அதனால் உன்கிட்ட இருந்து வரக் கதையும் அந்த அளவுக்கு இருக்கணும்'னு சொன்னாரு. அப்புறம் கொஞ்ச நேரம் பேசிட்டு இருந்தோம் அப்போதான் பெண்கள் கிரிக்கெட் பத்தி எடுக்கலாம்னு சிவா ஐடியா கொடுத்தார். சரி தயாரிப்பாளர்கள் கிட்ட கதையை முழுசா சொல்ற மாதிரி ரெடி பண்ணிக்கோ 'புக்'தான் கொடுப்பேனு சொல்லாத எல்லாரும் கதையை முழுசா கேப்பாங்கனு சொன்னாரு. சரி அவருக்கு தெரிஞ்ச தயாரிப்பாளர் யார்கிட்டயாவது அனுப்பிவிடுவாருனு நினைச்சிட்டு இருந்தன். அப்பறம் திடிர்னு புக் கொடுன்னு வாங்கி படிச்சுட்டு நானே பண்றேனு சொல்லிட்டாரு.

 

 

பெண்கள் கிரிக்கெட் பற்றி படம் பண்றோம்னு சொன்னதும் ரெஸ்பான்ஸ் எப்படி இருந்துச்சு?

 

பெண்கள் கிரிக்கெட் வச்சு படம் இதுவரை யாரும் எடுக்கவில்லை என்பதால்தான் நாங்க இந்த படத்தை எடுக்கலாம்னு முடிவு பண்ணினோம். இப்படி ஒரு படம் பண்ணப்போறோம்னு சொன்னதும் நிறைய கிரிக்கெட்டர்ஸ் உள்ளே வந்தாங்க. முக்கியமா பங்களாதேஷ் கிரிக்கெட் டீம் கோச்சர் எனக்கு மெயில் பண்ணாங்க 'முதலில் பாராட்டினாங்க, அப்பறம் நீங்க எந்த மொழியில் இந்தப் படத்தை எடுக்க போறிங்கனு தெரியல ஆனா உங்களுக்கு என்ன உதவி வேண்டுமானாலும் நான் பண்றேண்ணு சொன்னாங்க' இதுக்கு முன்னாடி அவங்க இந்தியன் டீம் அசிஸ்டன்ட் கோச்சரா இருந்தாங்க. அதுக்கு அப்பறம் நிறைய பெண் கிரிக்கெட்டர்ஸ் அவங்க அனுபவங்களை எல்லாம் சொன்னாங்க அதையெல்லாம் கேக்கும்போது எனக்கு பிரமிப்பா இருந்துச்சு. அப்பறம் நாம இதுவரைக்கும் விளையாடின அனுபவம் இதை எல்லாம் கதைக்கு ஏத்தமாதிரி மாத்தி ரெடி பண்ணினோம்.

நம்ம ஊரு குளித்தலை அங்க முழுக்க விவசாயம்தான், நானும் விவசாய நிலத்தில் கிரிக்கெட் விளையாடி பழகினவன்தான் அதனால் எதுவும் கஷ்டமா தெரியல. ஆனா, இதுக்காக ரிசர்ச் பண்ணோம்.

 

 

சாத்தியாராஜ் சார் மற்றும்  ஐஸ்வர்யா ராஜேஷ் இவங்க எப்படி இந்த படத்துக்குள் உள்ள வந்தாங்க?

 

நாங்க அந்த மாதிரி சொன்னதும் நிறைய பேர் வந்தாங்க ஆனா யாருக்கும் அடிப்படையான கிரிக்கெட்டும் தெரியல, நடிப்பும் வரல. நான் இரண்டையும் ஒரே நேரத்தில் சொல்லிக்கொடுக்க முடியாது. அதனால் ஆக்ட்ரஸ் வச்சி போய்டலாம்னு முடிவு பண்ணேன், அவங்களை குளித்தலை பெண்ணா காட்டவும், வசதியா இருந்துச்சு. அவங்க கிட்ட ஆரம்பிக்கும்போதே சொல்லிட்டேன் சரியா வரும்னு தோணுச்சுனா பண்ணலாம் இல்லனா வேண்டாம்னு, அவங்களும் அதையே சொன்னாங்க. அப்புறம் சத்தியராஜ் சார், அவர் பண்ணாதான் சரியா இருக்கும்னு கதை எழுதும் போதே முடிவு பண்ணிட்டேன். அவர் சொன்னாதான் சில விஷயங்களெல்லாம் சரியா போய் சேரும். அதே மாதிரி அவர் ஒவ்வொரு முறையும் என்ன சார்னு கூப்பிடும்போதும் எனக்கு கூச்சமா இருக்கும். அவ்வளவு பெரிய மனுஷன் நம்மள சார்னு கூப்பிடறாரேன்னு. அப்படித்தான் ஒருமுறை பத்து மணிக்கு வரசொல்லிட்டேன். ஆனா நான் இன்னொரு சீன் முடிச்சிட்டு வர நேரம் ஆயிடுச்சு, அதுக்காக அவர்கிட்ட போய் மன்னிப்பு கேட்டேன். அதுக்கு 'டைரக்டர் எப்போ வர சொல்றாரோ அப்போ வந்து, எப்போ போக சொல்றாரோ அப்போ போகத்தான் காசு வாங்குறேன், அதுதான் என் வேலையும்கூட அதனால் மன்னிப்பெல்லாம் வேண்டாம்'னு சொன்னாரு. இவர் மாதிரி வேற யார் இருக்கானு எனக்கு தெரியல.

 

 

எப்படி ஆராதனாவை இந்தப் படத்துக்குள் கொண்டுவந்திங்க ?
 

நாங்க எல்லாரும் ஒரே குடும்பம்தான். அதுமட்டும் இல்லாம ஆராதனாவை சின்ன வயசுல இருந்தே பார்த்துட்டு இருகேன், அதனால் எனக்கு தெரியும் அவங்க பாடுவாங்களா இல்லையானு. முக்கியமா அந்த இடத்துக்கு உண்மையான ஒரு அப்பா, பொண்ணு பாடினால் நல்லா இருக்கும்னு தோணுச்சு. அதனால்தான் அவங்களை பாட வைத்தோம்.

சார்ந்த செய்திகள்