Skip to main content

ஹாலிவுட் படத்தில் இளையராஜா - சர்வதேச விழாக்களில் போட்டிபோடும் ’எ பியூட்டிஃபுல் பிரேக்அப்’

Published on 27/06/2022 | Edited on 27/06/2022

 

Ilayaraja in Hollywood movie 'Come Free Me' song

 

அஜித்வாசன் உக்கினா இயக்கத்தில் ’எ பியூட்டிஃபுல் பிரேக்அப்’ என்ற ரொமாண்டிக் ஆங்கில த்ரில்லர்  திரைப்படம் உருவாகி வருகிறது. இப்படத்தில் க்ரிஷ் முத்ரகடா மற்றும் மேட்டில்டா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்க, இளையராஜா இசையமைத்துள்ளார். இது நீண்ட நாட்களுக்குப் பிறகு இளையராஜா இசையமைக்கும் திரில்லர் படமாகும். இப்படத்திற்காக BOW TIE Symphony Orchestra -ல் மாயாஜாலமான அசல் ஒலிப்பதிவுகளை இளையராஜா உருவாக்கியுள்ளாராம். அதோடு, இளையராஜா அமைத்துள்ள பின்னணி இசை படத்திற்குப் பெரிய பக்கபலமாக உள்ளதாம்.  

 

அதனால் படத்தினை பெரிய அளவில் விளம்பரப்படுத்த திட்டமிட்டுள்ள படக்குழு, ஆஸ்கார் கிராமி, கோல்டன் குளோப் போன்ற பல சர்வதேச விழாக்களுக்கு அனுப்பிவருகிறது. இப்படத்தில் இடம்பெற்றுள்ள ‘கம் ஃப்ரீ மீ’ பாடல் உலக இசை தினமான ஜூன் 21ஆம் தேதி வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வெகுவாகக் கவனம் பெற்றது குறிப்பிடத்தக்கது.

 

 

சார்ந்த செய்திகள்