Skip to main content

'பேச்சிலர்' படத்தின் ட்ரைலரை வெளியிட்ட படக்குழு 

Published on 22/11/2021 | Edited on 22/11/2021

 

gv prakash's bachelor movie trailer out now

 

‘சிவப்பு மஞ்சள் பச்சை’ படத்தில் உதவி இயக்குநராக பணிபுரிந்த சதீஸ் செல்வகுமார் இயக்கத்தில் ஜி.வி. பிரகாஷ் ‘பேச்சிலர்’ படத்தில் நடித்துள்ளார். இப்படத்தில் கதாநாயகியாக திவ்யா பாரதி நடித்துள்ளார். இயக்குநர் மிஷ்கின் கௌரவ கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் இப்படத்தை ஆக்ஸஸ் ஃபிலிம் ஃபேக்டரி சார்பில் டில்லி பாபு தயாரிக்கிறார். இந்தப் படத்தில் ஹீரோவாக நடிப்பது மட்டுமன்றி, இசையமைப்பாளராகவும் ஜி.வி. பிரகாஷ் பணிபுரிந்துள்ளார். 

 

பாடத்தின் அனைத்து பணிகளும் முடிந்துள்ள நிலையில் பேச்சிலர் திரைப்படம் டிசம்பர் 3ஆம்  தேதி திரையரங்குகளில் வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. இந்நிலையில்  'பேச்சிலர்' படத்தின் ட்ரைலரை படக்குழு தற்போது வெளியிட்டுள்ளது. உண்மைக் கதையை மையமாக வைத்து எடுக்கப்பட்ட இப்படத்தின் ட்ரைலர் சமூக வலைதங்களில் ட்ரெண்டாகி வருகிறது.  

 

 

 

சார்ந்த செய்திகள்