Skip to main content

கங்கனா ரனாவத் எடுத்த புது அவதாரம்

Published on 06/02/2025 | Edited on 06/02/2025
kangana ranaut starts hotel in himalayas

பாலிவுட்டில் நடிகையாக தனது சினிமா கரியரைத் தொடங்கிய கங்கனா ரனாவத், குயின் படத்தில் வசனம் எழுதியதன் மூலம் வசனகர்த்தாவாக உருவெடுத்தார். பின்பு ‘டிக்கு வெட்ஸ் ஷேரு’ படம் மூலம் தயாரிப்பாளராக அவதாரம் எடுத்த நிலையில் அவர் நடித்த மணிகர்ணிகா மூலம் இணை இயக்குநராக மாறினார். அடுத்து இயக்குநராக சமீபத்தில் வெளியான எமர்ஜென்சி படம் மூலம் உருவெடுத்தார். இப்போது ஏ.எல்.விஜய் இயக்கத்தில் மாதவன் நடிக்கும் படத்தில் நடித்து வருகிறார். 

திரைப்படங்களில் அடுத்தடுத்து புது அவதாரம் எடுத்த கங்கனா ரனாவத், கடந்த ஆண்டு அரசியலிலும் அதிகாரப்பூர்வமாக நுழைந்து நாடாளுமன்ற உறுப்பினராகவும் மாறினார். இப்படி தொடர்ந்து பல்வேறு அவதாரங்களை எடுத்து வரும் அவர் தற்போது தொழிலதிபராக அவதாரம் எடுத்துள்ளார். இமயமலையில் ஒரு உணவகத்தைத் தொடங்கியுள்ளார். 

இந்த உணவம் தனது சிறுவயது கனவு எனச் சொல்லும் அவர் உணவகத்துக்கு ‘தி மவுன்டெய்ன் ஸ்டோரி’ என பெயர் வைத்துள்ளார். இந்த உணவகம் வருகின்ற 14ஆம் தேதி திறக்கப்படும் எனத் தனது சமூக வலைதளப்பக்கத்தில் தெரிவித்து உணவகத்தின் புகைப்படங்களையும் அறிமுகப்படுத்தும் வீடியோவையும் பகிர்ந்துள்ளார். உணவகம் தொடங்குவது குறித்து முன்னதாகவே ஒரு பேட்டியில் கங்கனா ரனாவத் பேசியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 

சார்ந்த செய்திகள்