Skip to main content

ஓடிடியிலும் ஹிட்டடித்த விக்ரம்; ஹாட் ஸ்டார் பாராட்டு 

Published on 13/07/2022 | Edited on 13/07/2022

 

good response vikram ott release

 

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிப்பில் வெளியாகி ரசிகர்களின் பேராதரவை  பெற்ற படம் விக்ரம். இப்படம் உலகம் முழுவதும் கிட்டத்தட்ட 500 கோடிக்கும் மேல் வசூல் செய்ததாக கூறப்படுகிறது.  மேலும் சிங்கப்பூர், துபாய் உள்ளிட்ட சில நாடுகளில் அதிக வசூல் செய்த தமிழ் படம் என்ற பெருமையை பெற்றுள்ளது. திரையரங்குகளில் பெற்ற வெற்றியை தொடர்ந்து பிரபல ஓடிடி தளமான ஹாட்ஸ்டாரில் வெளியாகி அதிலும் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. 

 

இந்நிலையில் விக்ரம் படம் குறித்து ஹாட் ஸ்டார் தரப்பில் கூறியதாவது, "உலகெங்கிலும் உள்ள பாக்ஸ் ஆபிஸில் வெற்றி பெற்ற பிறகு, டிஸ்னி+ ஹாட் ஸ்டாரில் விக்ரம் படத்திற்கு கிடைத்து வரும் அற்புதமான வரவேற்பு எங்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. பார்வையாளர்கள் படத்தின் ஒவ்வொரு தருணத்தையும் தனித்தனியே கொண்டாடி,  பாராட்டி வருகின்றனர். இப்படம் தேசிய அளவில் ஓடிடி தளத்தில் மிகப்பெரிய  வெளியீடாக அமைந்தது. கமல்ஹாசன் போன்ற ஒரு நட்சத்திரம் மீது பார்வையாளர்கள் இதயத்தில் வைத்திருக்கும் உண்மையான அன்புக்கு இதுவே சாட்சி. விக்ரம் படத்தினை இன்னும் அதிகமான பார்வையாளர்களுக்கு டிஜிட்டல் முறையில் கொண்டு செல்வதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம்" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

'உப்பு புளி காரம்' சீரிஸின் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு

Published on 15/04/2024 | Edited on 15/04/2024
hotstar new series uppu puli kaaran  first look released

இந்தியாவின் முன்னணி ஸ்ட்ரீமிங் தளமான டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டார், அடுத்து வழங்கும் புதிய சீரிஸ், 'உப்பு புளி காரம்'. இதில் பொன்வண்ணன், வனிதா, ஆயிஷா, நவீன், அஷ்வினி, தீபிகா, கிருஷ்ணா, ஃபரினா மற்றும் ராஜ் அய்யப்பா உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் இணைந்து நடித்துள்ளனர்.

நவீன தலைமுறையின் காதல் மற்றும் உறவுகள் பற்றிய கதையுடன், இந்த சீரிஸ் உருவாகியுள்ளதாக கூறப்படுகிறது. இந்த ஹாட்ஸ்டார் ஸ்பெஷல்ஸ் சீரிஸை, விகடன் டெலிவிஸ்டாஸ் தயாரித்துள்ளது. இயக்குநர் எம் ரமேஷ் பாரதி இயக்கியுள்ளார். ஷேக் என்பவர் இசையமைத்துள்ளார். 

இந்த நிலையில் இந்த சீரிஸின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் தற்போது வெளியாகியுள்ளது. மேலும் விரைவில் இந்த சீரிஸ் ஸ்ட்ரீம் செய்யப்படவுள்ளது. டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டாரின் சமீபத்திய வெளியீடுகளான ஹார்ட் பீட், மத்தகம் மற்றும் லேபிள் சீரிஸ்கள், வரவேற்ப்பை பெற்றது குறிப்பிடத்தக்கது. 

Next Story

'இந்தியாவிலேயே இவரைப் போன்ற எம்பி யாரும் இருப்பதாக எனக்கு தெரியவில்லை' -கமல்ஹாசன் பேச்சு

Published on 11/04/2024 | Edited on 11/04/2024
Kamal Haasan campaign in madurai

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாக தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது.

இந்நிலையில் இந்தியா கூட்டணி சார்பில் மதுரையில் போட்டியிடும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வேட்பாளர் சு.வெங்கடேசனை ஆதரித்து  மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். கூட்டத்தில் பேசிய அவர், ''இவரைப் பற்றி சொல்ல வேண்டுமென்றால் வழக்கமாக என்னை கேட்பார்கள் அரசியலுக்கு ஏன் வந்தீர்கள்? நீங்கள் எப்படி கையெழுத்து போட போகிறீர்கள் என்று. வித்தியாசமான அரசியல் செய்ய வந்திருக்கிறேன் என்று பெருமையாக மார் தட்டிக் கொண்டேன். இனி நாம் செய்ய போவதையும் செய்து இருப்பதைதான் சொல்ல வேண்டுமே தவிர, செய்யத் தவறியவர்களின் குற்றங்களை பட்டியலிடுவது என்பது நேர விரையம். அது உங்களுக்கே தெரியும். எங்கெங்கு தப்பு நடந்திருக்கிறது என்பதை சொல்லி உங்க நேரத்தையும் எங்க நேரத்தையும் வீணடிக்க கூடாது.

நவீன அரசியல் ஒருவரை ஒருவர் திட்டிக் கொள்ளும் அரசியலாக இருக்கக்கூடாது. ஒருவரை ஒருவர் திருத்திக் கொள்ளும் அரசியலாக இருக்க வேண்டும். அதனால் நான் சொல்கிறேன் இவர் செய்ததை சொல்கிறேன். கோவிட் என்ற காலகட்டத்தில் ஒரு சாதாரணமாக எம்பிக்கு  கொடுக்க வேண்டிய ஐந்து கோடி ரூபாய் ஒதுக்கீடு கூட இல்லாத நேரத்தில், பல நற்பணிகளை செய்து இருக்கிறார். அவருக்கு இன்னொரு வாய்ப்பு கொடுக்க வேண்டியது உங்களுடைய கடமை. இந்த வட்டாரத்திற்கு நீங்கள் செய்யும் நல்லது.

இவர் நல்ல எழுத்தாளர், பெரிய பெரிய நாவல்களை எழுதி இருக்கிறார் என்பதெல்லாம் சொல்வதை விட ஒரு இடத்திற்கு பம்ப் செட் போட்டு கொடுத்திருக்கிறார். ஒரு விவசாய ஊருக்கு ரயில் பாதை அமைத்துக் கொடுத்திருக்கிறார். இவர் செய்த நற்பணிகளை எல்லாம் திரட்டி ஒரு வீடியோ ஆவணம் செய்திருந்தார்கள். அதை வெளியிடும் பெருமை எனக்கு கிடைத்தது. நான் சொல்லுவது மிகை என்றால் திருத்திக் கொள்கிறேன். ஆனால் இந்தியாவிலேயே இப்படி, தான் செய்த விஷயங்களை பட்டியல் போடும் அளவிற்கு வேலை செய்த எம்பிக்கள் என்று யாரும் இருப்பதாக எனக்கு தெரியவில்லை'' என்றார்.