Skip to main content

நடிகர்கள் சம்பளத்தை குறைக்காவிட்டால்... தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா ஆவேசம்! 

Published on 24/04/2018 | Edited on 26/04/2018
gnanavel raja


தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜுன் நடிப்பில் உருவாகி இருக்கும் 'என் பெயர் சூர்யா என் வீடு இந்தியா' வரும் மே 4ம் தேதி உலகமெங்கும் வெளியாக உள்ளது. அனு இமானுவேல் நாயகியாக நடித்துள்ள இப்படத்தில் சரத்குமார் வில்லன் வேடத்தில் நடித்திருக்கிறார். மேலும் முக்கிய கதாபாத்திரத்தில் அர்ஜுன், நதியா ஆகியோர் நடித்திருக்கின்றனர். மேலும் இப்படம் தெலுங்கில் இருந்து தமிழில் டப் செய்யப்பட்டு வெளியாக இருக்கின்ற நிலையில் இதனுடைய பத்திரிகையாளர்கள் சந்திப்பு நேற்று சென்னையில் நடைபெற்றது. இதில் தயாரிப்பாளர் ஸ்ரீதர், ஞானவேல் ராஜா, இப்படத்தை தமிழில் விநியோகிக்கும் சக்திவேலன், ஆகியோர் கலந்துக் கொண்டனர்.

அப்போது தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா விழா மேடையில் பேசுகையில்... "தெலுங்கு திரைப்பட உலகம் தான் சிறப்பாக இருக்கிறது. அனைவரும் அதிகம் லாபம் சம்பாதிக்கிறார்கள். ஒரு படத்தின் பட்ஜெட் 100 கோடி என்றால், அங்குள்ள நடிகர்கள் சம்பளம் 10 அல்லது 15 கோடி தான் சம்பளம் வாங்குகிறார்கள். படத்தையும் பிரம்மாண்டமாக கொடுக்கிறார்கள். ஆனால், இங்குள்ள நடிகர்கள் 100 கோடி பட்ஜெட் என்றால், படத்தின் நாயகனே 50 கோடி சம்பளம் கேட்கிறார். மீதியிருக்கும் பணத்தில் எப்படி படத்தை பிரம்மாண்டமாக எடுக்க முடியும். அதுமட்டுமில்லாமல், தெலுங்கு நடிகர்கள் முன்பணமாக 50 லட்சம் கொடுத்தால் போதும். ஆனால், இங்கு முன்பணமாக 10 கோடி கேட்கிறார்கள். இதனால், தயாரிப்பாளர்களுக்கு பெரும் சிரமம் ஏற்படுகிறது. நடிகர்கள் சம்பளத்தை குறைக்க வேண்டும். இதற்காக ஒரு குழு அமைத்து சம்பளத்தை வரைமுறை படுத்த வேண்டும். இதை நடிகர் சங்க செயலாளரும், தயாரிப்பாளர் சங்க தலைவருமான விஷால் சரி செய்வார் என்று நம்புகிறேன். இந்த சூழ்நிலை மாறவில்லை என்றால், தெலுங்கு படங்களை தயாரிக்க அங்கு சென்றுவிடுவேன். ஏற்கனவே அங்கு அலுவலகம் வாங்கி விட்டேன். ஏனென்றால் நஷ்டத்தில் படம் தயாரிப்பதை விட லாபத்தில் படம் தயாரிக்கத்தான் அனைவரும் விரும்புவார்கள்" என்றார். 

சார்ந்த செய்திகள்

Next Story

'மௌனகுரு' இயக்குனரின் அடுத்த படம்... ஹீரோ இவர்தான்!

Published on 15/11/2018 | Edited on 15/11/2018
magamuni



ஸ்டுடியோ கிரீன் பட நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் கே.ஈ. ஞானவேல்ராஜா தயாரிக்கும் புதிய திரைப்படம் 'மகாமுனி'. நடிகர் ஆர்யா, நடிகை மஹிமா நம்பியார், இணைந்து நடிக்கும் இப்படத்தில் இந்துஜா, ஜுனியர் பாலையா, ஜெயப்ரகாஷ், அருள் தாஸ், ஜி எம் சுந்தர், காளி வெங்கட் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்கள். மௌனகுரு பட இயக்குனர் சாந்தகுமார் இயக்கவுள்ள 'மகாமுனி' படத்தின் தொடக்கவிழா இன்று காலை சென்னையில் எளிமையாக நடைபெற்றது. அப்போது படத்தின் தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா, படத்தின் இயக்குநர் சாந்தகுமார், நாயகன் ஆர்யா, நாயகி இந்துஜா, ஒளிப்பதிவாளர் அருண் பத்மநாபன், கலை இயக்குநர் ரெம்போன் பால்ராஜ், எடிட்டர் வி.ஜெ சாபு ஜோசப் உள்ளிட்ட படக்குழுவினரும், தொழில்நுட்ப கலைஞர்களும் கலந்துகொண்டனர்.

 

mounaguru



மேலும் இப்படம் குறித்து இயக்குனர் சாந்தகுமார் பேசும்போது... “க்ரைம் திரில்லர் ஜானரில் ‘மகாமுனி ’ தயாராகிறது. படத்தின் திரைக்கதை அனைத்து தரப்பினரையும் கவரும் வகையில் பரபரப்பாக அமைக்கப்பட்டிருக்கிறது. சென்னை, காஞ்சிபுரம், ஈரோடு ஆகிய மாவட்டங்களில் படப்பிடிப்பை நடத்த திட்டமிட்டுள்ளோம்" என்றார்.

இவர் இயக்கிய முதல் படமான 'மௌனகுரு’, நடிகர் அருள்நிதிக்கு பெரிய ப்ரேக்காக அமைந்தது. அந்தப் படம் ’ஃபாக்ஸ் ஸ்டார்’ நிறுவனத்தின் தயாரிப்பில் இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸால் ரீமேக் செய்யப்பட்டது. சில தோல்விகளால் தொய்வாக இருக்கும் ஆர்யாவுக்கு இந்தப் படம் ப்ரேக்காக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

 

 

Next Story

திருமணமான ஆண்களை மயக்கும் நடிகைகள்.... ஒரு அதிர்ச்சி ட்வீட் !

Published on 22/03/2018 | Edited on 23/03/2018
neha


திரைப்பட உலகில் பொதுவாக இயக்குநர்களோ, நடிகர்களோ, தயாரிப்பாளர்களோ நடிகைகளுக்கு பாலியல் தொல்லை தருகிறார்கள் என்றும் தன்னை படுக்கைக்கு அழைக்கிறார்கள் என நடிகைகள் காலம் தொட்டு குற்றசாட்டுகளை திரைப்படத்துறையினர் மேல் அடுக்கி வருகின்றனர். அது சமூகத்தில் விவாதப்பொருளாகவும் சமீபகாலங்களிலும் மாறி வருகிறது. இந்நிலையில் தற்போது இதற்கு அப்படியே நேர்மாறாக இன்னொரு பிரச்சனையும் தலைதூக்கி உள்ளதுதிரைப்பட தயாரிப்பாளர் ஞானவேல்ராஜாவின் மனைவி நேஹா, நேற்றிரவு டிவிட்டரில் பதிவு ஒன்றை வெளியிட்டார். அதில் "திருமணமான ஆண்களின் குடும்பத்தை உடைக்க சில ஹீரோயின்கள் நினைக்கின்றனர். அவர்கள் பாலியல் தொழில் செய்பவர்களை விட கீழ்த்தரமானவர்கள். சினிமாவில் வாய்ப்பு கிடைக்க வேண்டும் என்பதற்காக அவர்கள் படுக்கையை பகிரவும் தயங்கமாட்டார்கள். அந்த நடிகைகளின் தகவல்களை நான் விரைவில் வெளியிடுவேன்" என்று பதிவிட்டிருந்தார்.

 

neha



இதையடுத்து இந்த டுவிட் சமூக வலைத்தளங்களில் பரவி சர்ச்சையை ஏற்படுத்த, பின்பு நேஹா அந்த பதிவை நீக்கி விட்டார்பின்னர் நீக்கிய பதிவிற்கு விளக்கமளித்த அவர்... "நான் வெளியிட்ட கருத்துகள் எனது குடும்பத்தில் நடக்கும் பிரச்சனைகள் அல்ல. எனது கணவருடன் எனக்கு எந்தப் பிரச்சனையும் இல்லை. ஆனால் என்னைச் சுற்றி இருப்பவர்களின் ஒரு சிலரது நடவடிக்கைகள் என்னை அதிருப்தியடைய செய்துள்ளன. சில ஹீரோயின்கள் திருமணமான ஆண்களின் வாழ்க்கையில் தலையிட்டு, பிரச்சனைகளை ஏற்படுத்துகின்றனர். இதுதொடர்பாக கருத்து கூறினால் லீக் என்ற வார்த்தையால் சர்ச்சையை ஏற்படுத்துவார்கள். நான் பிறரின் கவனத்தை ஈர்க்கவோ, நாடகம் நடத்தவோ பதிவிடவில்லை. எனது கணவருடன் எனக்கு பிரச்சனை என்பது போன்ற கருத்துக்கள் வந்ததாலும், சர்ச்சையை கிளப்பும் என்பதாலும் நான் அந்த ட்விட்டை நீக்கிவிட்டேன். இருப்பினும் இது, நான் குறிப்பிட்ட அந்தப் பெண்களுக்கு ஒரு எச்சரிக்கையாக இருக்கும். சமூக வலைத்தளங்கள் எத்தனை சக்தி வாய்ந்தது என்பதை அவர்கள் புரிந்து கொள்ளட்டும்" என்று மற்றோரு ட்விட்டை பதிவிட்டிருந்தார்.