Skip to main content

பிரபல தமிழ் ஹீரோவிடம் கைவரிசையை காட்டிய திருடர்கள்!

Published on 02/12/2020 | Edited on 02/12/2020
gowtham karthik

 

 

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக இருந்தவர் கார்த்திக். இவரது மகன் கௌதம் கார்த்திக், மணிரத்தினத்தின் 'கடல்' படத்தின் மூலம் அறிமுகமான இவர், வை ராஜா வை,  ஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். தற்போது, இயக்குனர் எழில் இயக்கும் பெயரிடப்படாத படத்தில் நடித்து வருகிறார்.

 

இந்தநிலையில், இன்று காலை கெளதம் கார்த்திக், சென்னை டி.டி.கே. சாலையில் சைக்கிள் பயிற்சி மேற்கொண்டுள்ளார். அப்போது அங்குவந்த மர்மநபர்கள், கெளதம் கார்த்திக்கின் செல்போனை பறித்து சென்றுள்ளனர்.

 

இதுதொடர்பாக கொடுக்கப்பட்ட புகாரின் அடிப்படையில், மயிலாப்பூர் வழக்குப்பதிவு செய்து, செல்போனை பறித்து சென்றவர்களை பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

ரஹ்மான் காட்ஃபாதர்; சிலம்பரசன் அண்ணன் - பாசமழை பொழியும் கெளதம் கார்த்திக்

Published on 31/03/2023 | Edited on 31/03/2023

 

Gautham Karthik Spoke about pathu thala

 

நடிகர் கௌதம் கார்த்திக், தான் மிகவும் எதிர்பார்க்கப்படும் படமாக 'பத்து தல' இருப்பதாக சொல்லி இருந்தார். உலகம் முழுவதும் நேற்று திரையரங்குகளில் வெளியானதில் மிகவும் உற்சாகமாக இருக்கிறார். நடிகர் சிலம்பரசன், இயக்குநர் கிருஷ்ணா மற்றும் ஒட்டுமொத்த குழுவினருடன் இந்தப் படத்தில் பணிபுரிந்த அனுபவத்தைப் பகிர்ந்து கொண்டார். 

 

“ஒரு நடிகருக்கு அறிமுகப் படம் எப்படி முக்கியமோ, அதேபோன்று திருப்புமுனையை ஏற்படுத்தக் கூடிய ஒரு படமும் முக்கியமானது. 'பத்து தல' திரைப்படம் எனக்கு அப்படியான ஒரு உணர்வுப்பூர்வமான படம். முழு படமும் மிகவும் சவாலானதாகவும் அர்த்தமுள்ளதாகவும் இருந்தது. இது முழுமையான ஒரு டீம் வொர்க். அணியில் ஒருவர் இல்லாமல் கூட, இந்தப் படம் திட்டமிட்டபடி முழுமையாக முடித்திருக்க முடியாது. இரண்டு கொரோனா கால கட்டங்கள் உட்பட பல கடினமான விஷயங்களையும் நாங்கள் கடந்துதான் வந்திருக்கிறோம். இந்த சமயத்தில் எங்களுக்கு உறுதுணையாக இருந்த தயாரிப்பாளர்கள் ஜெயந்திலால் கடா மற்றும் கே.இ.ஞானவேல்ராஜா அவர்களுக்கு எனது மனமார்ந்த நன்றிகள். 

 

சிலம்பரசன் அண்ணன் இல்லாவிட்டால் 'பத்து தல' திரைப்படம் எங்களுக்கு நிறைவேறாத ஒன்றாகவே இருந்திருக்கும். எனக்காக அவர் சிரமப்பட்டு, கடினமான சவால்களைச் சந்தித்த விதம் என்னை வாயடைக்கச் செய்கிறது. அவர் உடல் அளவில் பல மாற்றங்களை கொண்டு வந்தார். ஒரு படத்திற்காக மீண்டும் எடையை அதிகரிக்க யாராவது தைரியமாக முடிவு செய்வார்களா என்று எனக்குத் தெரியவில்லை. இது கற்பனைக்கு அப்பாற்பட்டது; அவர் அதைச் செய்தார். அவரது அர்ப்பணிப்பும் ஆர்வமும் தான் இவ்வளவு அற்புதமான ரசிகர் பட்டாளத்தை அவருக்குத் தந்துள்ளது. அவரது நடிப்பு திரையில் ரசிகர்களுக்கு நல்ல விருந்தாக அமையும். 

 

ப்ரியா பவானி சங்கர் ஒரு அற்புதமான கோ- ஸ்டார். படப்பிடிப்புக்கு சரியாக வரும் நேரமும் ஆர்வமும் நிச்சயம் பாராட்டப்பட வேண்டிய ஒன்று. இயக்குநர் கிருஷ்ணா சார் தூணாக இருந்து முழு படத்தையும் தோளில் சுமந்துள்ளார். ஏ.ஆர்.ரஹ்மான் சார் பல நடிகர்களின் காட் ஃபாதர். நான் எப்போதும் அவரை மிகப்பெரிய இன்ஸ்பிரேஷனாகவே பார்க்கிறேன். அத்தகைய ஜாம்பவானுடன் பணியாற்றுவது எனக்கு ஆசீர்வாதம். மேலும் இந்த படத்தில் அவர் எனக்காக அழகான பாடல்களை கொடுத்துள்ளார்".

 

 

Next Story

"பத்து தல ஒத்துக்கிட்டதுக்கு முக்கிய காரணம் அவருதான்" - சிம்பு

Published on 24/03/2023 | Edited on 25/03/2023

 

simbu speech at pathu thala press meet

 

கிருஷ்ணா இயக்கத்தில் 'பத்து தல' படத்தில் நடித்து முடித்துள்ளார் சிம்பு. இப்படத்தில் கௌதம் கார்த்திக், கெளதம் மேனன், கலையரசன், பிரியா பவானி சங்கர் உள்ளிட்டோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ஸ்டூடியோ க்ரீன் ஞானவேல் ராஜா தயாரிக்கும் இப்படத்திற்கு ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்துள்ளார். இப்படம் 2017 ஆம் ஆண்டு கன்னடத்தில் வெளியாகி வெற்றி பெற்ற 'மஃப்டி' படத்தின் தமிழ் ரீமேக் ஆகும். 

 

இப்படம் வருகிற 30 ஆம் தேதி வெளியாகவுள்ள நிலையில் கடந்த 18 ஆம் தேதி இசை மற்றும் ட்ரைலர் வெளியீட்டு விழா நடைபெற்றது. இந்த நிலையில் இப்படத்தின் செய்தியாளர்களின் சந்திப்பு இன்று நடைபெற்றது. இதில் படக்குழுவினர் பலரும் கலந்து கொண்டு பேசினர்.  

 

அப்போது சிம்பு பேசுகையில், "இந்த படத்தில் இயக்குநர் கெளதம் மேனன் நடித்துள்ளார். எனக்கு தெரிந்து வெந்து தணிந்தது காடு இரண்டாம் பாகம் எடுக்க முடியுமா என்று தெரியவில்லை. ஏனென்றால் இப்போது எல்லா படங்களிலும் நடித்து வருகிறார். அந்தளவுக்கு பிசியாகிவிட்டார். இப்படம் வெளியான பின்பு இன்னும் பிசியாகி விடுவார் என்று நினைக்கிறேன். இப்படத்தின் ஒளிப்பதிவாளர் ஃபரூக் பாட்ஷா, அவரு பெயரிலே ஒரு ஃபயர் இருக்கும். பாட்ஷா மாறி இப்படத்தில் வேலை பார்த்துள்ளார். இப்படத்தில் என்னுடைய கதாபாத்திரத்துக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்ததாகவும் கவுதம் கார்த்திக் கதாபாத்திரத்திற்கு குறைவாக இடம் கொடுக்கப்பட்டிருப்பதாகவும் பேச்சுக்கள் எழுந்தது. அப்படி எல்லாம் ஒன்றுமில்லை. எல்லாருக்கும் சமமான இடத்தை இயக்குநர் கொடுத்திருக்கிறார். 

 

இதுபோன்று நிறைய நடிகர்களுக்கு சமமான இடம் கொடுக்கப்பட்டதாக விக்ரம் படத்தில் பார்த்தேன். அது போல் இப்படத்திலும் அனைவருக்கும் சமமான இடம் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த படம் ஒப்புக்கொள்வதற்கு முக்கியமான காரணம் கவுதம் கார்த்தி தான். ஆக்‌ஷன் காட்சிகளில் ஈசியாக நடித்து விட்டார். அதை அவரிடம் ரொம்ப ரசித்தேன். ஏ.ஆர். ரஹ்மான் அவருடைய பிஸியான நேரத்தில் இப்படத்தை கவனித்து வருகிறார். அவருக்கு ஸ்பெஷல் நன்றி" என்றார்.