இந்த ஆண்டின் பெரிதும் எதிர்பார்க்கப்படும் படங்களில் ஒன்றாக இருக்கிறது 'பொன்னியின் செல்வன்'. இரண்டு பாகங்களாக உருவாகியுள்ள இப்படத்தின் முதல் பாகம் தமிழ், இந்தி, தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளில் செப்டம்பர் 30-ஆம் தேதி திரையரங்கில் வெளியாகவுள்ளது. இப்படத்தில் விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, சரத்குமார், த்ரிஷா, ஐஸ்வர்யா ராய் உள்ளிட்ட பலர் முதன்மை கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். மணிரத்னம் இயக்கியுள்ள இப்படத்தை லைகா நிறுவனம் 500 கோடி பட்ஜெட்டில் மிகப்பிரமாண்டமாக தயாரித்துள்ளது. சமீபத்தில் இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி ரசிகர்களின் ஆர்வத்தை அதிகரித்தது.
இந்நிலையில் இப்படத்தின் ஓடிடி உரிமையை அமேசான் ப்ரைம் நிறுவனம் கைப்பற்றியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 'பொன்னியின் செல்வன்' படத்தின் முதல் பாகம் செப்டம்பர் 30-ஆம் தேதி திரையரங்கில் வெளியாகவுள்ள நிலையில் இப்படத்தின் முதல் மற்றும் இரண்டாம் பாகத்திற்கான ஓடிடி உரிமையை அமேசான் ப்ரைம் நிறுவனம் மிகப்பெரிய தொகை கொடுத்து கைப்பற்றியுள்ளதாக கூறப்படுகிறது. இது குறித்தான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் படக்குழு வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.