Published on 08/11/2018 | Edited on 08/11/2018
கமல்ஹாசன் அடுத்ததாக 'இந்தியன் 2' படத்தில் நடிக்கவுள்ளார். ஷங்கர் இயக்கவுள்ள இப்படத்தில் கமலுக்கு ஜோடியாக காஜல் அகர்வால் நடிப்பதாக சமீபத்தில் தகவல் வெளியாகியிருந்த நிலையில் நடிகர் துல்கர் சல்மான் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. துல்கர் சல்மான் ஏற்கனவே தமிழில், ‘வாயை மூடி பேசவும்’ படம் மூலம் அறிமுகமாகி பின் ‘ஓ காதல் கண்மணி’, ‘சோலோ’, ‘நடிகையர் திலகம்’ படங்கள் மூலம் பிரபலமானார். விரைவில் தொடங்கவுள்ள இப்படத்தின் படப்பிடிப்பிற்காக
தன் உடல் எடையை குறைத்து வருகிறார் கமல்ஹாசன்.