தமிழ் சினிமாவில் ஒரு திரைப்படம் எடுத்து அதை வெளியிட்டு போட்ட பணத்தை எடுப்பதற்குள் தயாரிப்பாளர்களின் நிலைமை அதோகதிதான். அதற்கான புதிய முயற்சியாக 'ட்ரீம் சினிமாஸ்' செயலி அறிமுகமாகியுள்ளது. டிஜிட்டல் யுகத்தில் இனி மொபைல் தான் எல்லாம் என்பதை கருத்தில் கொண்டு நல்ல திரைப்படங்களை அவர்கள் கைகளில் கொண்டு சேர்க்கும் விதமாக இந்த செயலி உருவாக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த செயலியை பதிவிறக்கம் செய்து பதிவு செய்பவர்களுக்கு இலவசமாக பிராண்டட் சட்டை தரப்படுகிறது. இந்த செயலியின் முதல் திரைப்படமாக 'தக்கர்' திரைப்படம் தீபாவளி அன்று வெளியிடப்படுகிறது. மேலும் இந்த செயலியில் மாத சந்தா குறைவு என்பதால் திரையரங்கிற்கு சென்று செலவு செய்யும் செலவு கம்மி என்கிறார்கள். மேலும் இந்த (Dream Cinemas) செயலி ஆண்ட்ராய்டு மொபைல்களில் இப்பொழுது கிடைக்கிறது வெகு விரைவில் 'IOS' லும் கிடைக்க ஏற்பாடுகள் நடந்து வருகிறது. இதன் மூலம் குறைந்த செலவில் படம் எடுத்து திரையரங்கில் வெளியிட முடியாமல் இருக்கும் தயாரிப்பாளர்கள் இந்த செயலியை பயன்படுத்தி தங்கள் படத்தை வெளியிட்டு தாங்கள் போட்ட பணத்தையும் எடுத்துவிடலாம் என்கிறது 'ட்ரீம் சினிமாஸ்' நிறுவனம்.