Skip to main content

தல - தளபதி... இருவரையும் டீல் செய்த இயக்குனர்கள்!

Published on 22/06/2020 | Edited on 22/06/2020


 

ajith vijay


தமிழ்ச் சமூக ஊடகத்தில் நிலவும் பல விஷயங்கள் திடீரென ட்ரெண்டிங் ஆகும், பின் தானே அடங்கும். பல விவாதங்கள் புயலாய் எழும், பின் ஓயும். ஆனால், எப்போதும் ஓயாத பிரச்னை என்றால் விஜய், அஜித் ரைவல்ரிதான்.

 

விஜய், அஜித் இருவருக்கும் தனித்தனியே நெருக்கமான, ஃபேவரிட் இயக்குனர்கள் என்று சிவா, விஷ்னுவர்தன், அட்லீ போன்ற சிலர் இருக்கின்றனர். அதே நேரம் விஜய், அஜித் இருவரையும் வைத்து படங்களை இயக்கியவர்களும் இருக்கின்றனர்.

 

வசந்த் 



1995ஆம் ஆண்டு அஜித்தை வைத்து ’ஆசை’ என்றொரு படத்தை இயக்கினார். இந்த வெற்றியைத் தொடர்ந்து 1997ஆம் ஆண்டு விஜய் மற்றும் சூர்யாவை வைத்து ’நேருக்கு நேர்’ என்றொரு படத்தை இயக்கினார். இந்தப் படத்தின் மூலம்தான் சூர்யா சினிமாவிற்கு அறிமுகமாகினார். முதலில் இந்தப் படத்தில் அஜித்தான் நடிப்பதாக இருந்தது. ஒருவேளை அது நடந்திருந்தால், இருவரும் இணைந்து நடித்த வெற்றிப் படமாக அது இருந்திருக்கும். எப்படியோ வசந்த் அஜித், விஜய்யை வைத்த இயக்கிய இரண்டு படங்களுமே வெற்றி படங்கள்தான்.

 

விக்ரமன்

 

விஜய்யின் சினிமா வாழ்க்கையில் ’பூவே உனக்காக’ என்னும் படத்தின் மூலம் முதல் வெற்றியைக் கொடுத்த இயக்குனர் விக்ரமன். இவரது இயக்கத்தில் அஜித் 'உன்னிடத்தில் என்னை கொடுத்தேன்' என்னும் படத்தில் நடித்திருந்தார். இதில் ஹீரோ ரோலாக இல்லாமல் கெஸ்ட் அப்யரன்ஸ் கொடுத்தார் அஜித்.

 

எஸ்.ஜே. சூர்யா

 

அஜித்திற்கு ஒரு டபுள் டமாக்கா வெற்றி என்றுதான் 'வாலி' படத்தின் வெற்றியைச் சொல்ல வேண்டும். ஆமாம், அஜித் இரு வேடங்களில், அதுவும் ஹீரோவும் அவரே வில்லனும் அவரே என்று முதல் முயற்சியில் வெற்றியைத் தழுவினார். அதற்கு வித்திட்டவர் எஸ்.ஜே. சூர்யாதான். இந்த வெற்றியைத் தொடர்ந்து அடுத்த படமே விஜய்யை கமிட் செய்து 'குஷி' என்னும் படத்தை இயக்கினார் எஸ்.ஜே.சூர்யா. இதுவும் வேற லெவல் வெற்றிதான்.

 

ஏ.ஆர். முருகதாஸ்

 

அஜித்தை வைத்து 'தீனா' படத்தை இயக்கினார் ஏ.ஆர்.முருகதாஸ். இதுதான் முருகதாஸுக்கு முதல் படம். இந்த படம் மிகப்பெரிய வெற்றி. விஜய்க்கு 'துப்பாக்கி', 'கத்தி', 'சர்கார்' என்று மூன்று படங்களை இயக்கியுள்ளார். இதில் சர்காரை தவிர மற்ற இரண்டும் பிளாக்பஸ்டர் வெற்றி.

 

எழில் 

 

விஜய்யை வைத்து தன்னுடைய முதல் படமான 'துள்ளாத மனமும் துள்ளும்' படத்தை இயக்கினார். இது பெரிய வெற்றி பெற்றது. அஜித்தை வைத்து ’பூவெல்லாம் உன் வாசம்’, ’ராஜா’ என்று இரண்டு படங்களை இயக்கினார். இதில் ’பூவெல்லாம் உன் வாசம்’ படம் குடும்பங்கள் கொண்டாடும் படமாக அமைந்தது.

 

கே.எஸ். ரவிக்குமார்

 

விஜய்யை வைத்து ’மின்சாரக்கண்ணா’ என்றொரு படத்தை இயக்கினர் கே.எஸ்.ரவிக்குமார். ’படையப்பா’ மாபெரும் வெற்றி, விஜய்க்கும் அப்போது தொடர் வெற்றி என்பதால் ’மின்சாரக்கண்ணா’ படத்திற்கு மக்களிடையே மிகுந்த எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால் படம் வெளியாகி தோல்வியடைந்தது. ’வில்லன்’, ’வரலாறு’ என்று இரண்டு படங்களை அஜித்தை வைத்து இயக்கினார். இதில் வில்லன் படம் வெற்றி, வரலாறு படம் பல தடைகளுக்குப் பின்னர் வெளியாகி மாபெரும் வெற்றியைப் பெற்றது.

 

rajavin parvaiyile

 

 

பேரரசு

 

விஜய்யை வைத்து ’திருப்பாச்சி’, ’சிவகாசி’ என்று இரண்டு மிகப்பெரிய வெற்றி படங்களை இயக்கியவர் பேரரசு. இதனையடுத்து ’திருப்பதி’ என்று படத்தை அஜித்தை வைத்து இயக்கினார். இந்த படம் நூறு நாட்கள் ஓடினாலும் விஜய்க்கு அவர் கொடுத்த வெற்றியை போல் வரவில்லை.

 

ஏ.எல்.விஜய்

 

அஜித்தை வைத்து ’கிரீடம்’ என்னும் படத்தை இயக்கினார் ஏ.எல்.விஜய். இதுதான் இவருடைய முதல் படம். மோகன்லால் நடிப்பில் ’கிரீடம்’ என்று மலையாளத்தில் வெளியாகி செம ஹிட் அடித்தது. ஆனால் அஜித் நடிப்பில் வெளியான ’கிரீடம்’ வெற்றிபெறவில்லை. அதைப் போல விஜய்யை வைத்து இயக்கிய ’தலைவா’ பல தடைகளுக்குப் பின்னர் வெளியானது. ஆனால், இதுவும் எதிர்பார்த்ததுபோன்று ஓடவில்லை.

 

http://onelink.to/nknapp

 

இவர்கள்தான் விஜய், அஜித் இருவரையும் இயக்கியவர்கள். இவர்கள் அனைவரையும் விடச் சிறப்பைப் பெற்றவர் ஜானகி சௌந்தர். விஜய், அஜித் இருவரையும் ஒரே படத்தில் இயக்கியவர். ‘ராஜாவின் பார்வையிலே’தான் விஜய், அஜித் இருவரும் இணைந்து நடித்த ஒரே படம். இப்படம் வெற்றி பெறவில்லை.

 

முன்பெல்லாம் விஜய், அஜித் படங்களில் ஒருவரை ஒருவர் தாக்குவதுபோல பஞ்ச் வசங்கள் இடம்பெற்றிருக்கும். ஆனால், அதே காலகட்டத்தில் இவர்கள் விஜய் அஜித்தை வைத்து படங்கள் இயக்கியிருந்தாலும் இவர்களது படங்களில் பெரும்பாலும் ரைவல்ரி வசனங்கள் இருக்காது. இந்த இயக்குனர்களைப் போல தற்போது விஜய், அஜித் இருவரில் ஒருவரது ஃபேவரிட் இயக்குனராக இருப்பவர்கள் மற்றவரை வைத்துப் படம் இயக்குவார்களா என்பதையும் அப்படி இயக்கினால் படம் எப்படி இருக்கும் என்பதையும் காண ஆவலாகத்தான் இருக்கிறது. 

 

 

சார்ந்த செய்திகள்