Skip to main content

மூன்று படங்களைப் பாராட்டிய சங்கர்!

Published on 09/12/2020 | Edited on 09/12/2020

 

shankar

 

இயக்குனர் ஷங்கர் தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனர் ஆவார். அவர் இயக்கி, நடிகர் கமல்ஹாசன் நடித்து மாபெரும் வெற்றி பெற்ற படம் இந்தியன். தற்போது இப்படத்தின் இரண்டாம் பாகத்தை ஷங்கர் இயக்கி வருகிறார். படப்பிடிப்பு சம்பவத்தில் ஏற்பட்ட விபத்தையடுத்து, முழு வீச்சுடன் நடைபெற்றுவந்த இப்படத்தின் படப்பிடிப்பு தடைப்பட்டது. அதனையடுத்து ஏற்பட்ட கரோனா நெருக்கடியால் பணிகளை மீண்டும் துவங்குவதில் தாமதம் ஏற்பட்டு வருகிறது.

 

இந்த நிலையில், இயக்குனர் ஷங்கர் சமீபத்தில் தான் பார்த்து ரசித்த மூன்று படங்கள் குறித்து ட்வீட் செய்துள்ளார். அதில், சுதா கொங்கரா இயக்கி, சூர்யா நடிப்பில் வெளியான சூரரைப் போற்று படத்தைப் பாராட்டியுள்ள ஷங்கர், அப்படத்தின் இசை குறித்தும் பாராட்டியுள்ளார். இயக்குனர் அட்லீ தயாரிப்பில் வெளியான அந்தகாரம் படத்தைப் பாராட்டி, அதன் ஒளிப்பதிவையும் பாராட்டியுள்ளார். மேலும், ஆஸ்கருக்குத் தேர்வாகியுள்ள மலையாளப்படமான ஜல்லிக்கட்டு படத்தைப் பாராட்டி, அதன் பின்னணி இசை குறித்தும் குறிப்பிட்டுள்ளார். 

 

 

சார்ந்த செய்திகள்