Skip to main content

"எந்த மிரட்டலுக்கும் அடிபணிய மாட்டோம்…" 'கள்ளன்' பட இயக்குநர் சந்திரா தங்கராஜ் பேச்சு

Published on 15/12/2021 | Edited on 15/12/2021

 

director Chandra Thangaraj talk about kallan movie issue

 

இயக்குநர் கரு.பழனியப்பன் கதாநாயகனாக நடிக்கும் கள்ளன் படத்தை  பிரபல எழுத்தாளரும், பத்திரிகையாளருமான சந்திரா தங்கராஜ் இயக்கியுள்ளார். இவர் இயக்குநர் அமீர், ராம் உள்ளிட்ட பல இயக்குநர்களிடம் உதவி இயக்குநராக பணியாற்றியுள்ளார். கள்ளன் படத்தில் கதாநாயகியாக நிகிதா நடித்துள்ளார். இப்படத்தின் முக்கிய கதாபாத்திரங்களில் வேலா ராமமூர்த்தி, நமோ நாரயணன், செளந்தர்ராஜா, ஸ்டண்ட் மாஸ்டர் தினேஷ் சுப்பராயன், ரெஜின், பருத்திவீரன் முருகன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். சமீபத்தில் வெளியான இப்படத்தின் டீசர் நல்ல வரவேற்பை பெற்றாலும் படத்தின் தலைப்பு குறித்து பலரும் கேள்வி எழுப்பினர்.

 

இந்நிலையில் படத்தின் இயக்குநர் சந்திரா தங்கராஜ் இது குறித்து பதிலளித்துள்ளார். அதில்," இந்தக் கதைக்கு இப்படியொரு டைட்டில்தான் பொருத்தமாக இருக்கும் என்பதால்தான் வைத்தோம். இது எந்த ஜாதியையும் முன்னிலைப் படுத்தி எடுக்கப்பட்ட படமல்ல.இது ஒரு ஆக்சன் க்ரைம் படம். வேட்டை சமூகத்தில் பிறந்து வளர்ந்த ஒருத்தன், இனிமேல் வேட்டையாடக்கூடாது என்று தடை போட்ட பிறகு வறுமையின் காரணமாக வாழ்க்கையில் ஒரே ஒரு தவறு செய்யும் சூழலுக்குத் தள்ளப்படுகிறான். அது அவன் வாழ்க்கையை புரட்டிப் போட்டுவிடுகிறது. வாழ வழியில்லாமல் அவனும்,அவனது நண்பர்களும் ஓடுகிற ஓட்டத்தில் கடைசியில் 'அறம்'தான் ஜெயிக்கும் என்பதைப் பரபரப்பாகச் சொல்லுகிற ஒரு கமர்ஷியல் படம்தான் இது.

 

வேட்டை சமூகம் என்பது எல்லா ஊரிலும், நாட்டிலும் இருக்கக் கூடியதுதான்.நான் பார்த்த ஒரு வாழ்க்கையை நெருக்கமாகச் சொல்லியிருக்கேன்.மக்களின் வாழ்வியலை சொல்லும் படமாக மட்டும் இன்றி, நல்ல கருத்தை மக்களுக்கு சொல்லும் படமாக இருக்கும். இப்படத்தில் இதில் எந்த இடத்திலும் ஜாதிய குறியீடோ,வசனமோ இருக்காது.யாருடைய மிரட்டலுக்கும் பயந்து டைட்டிலை மாத்துகிற எண்ணம் இல்லை. இந்த விளக்கத்தை எதிர்ப்பு தெரிவிப்பவர்களிடம் கூறிவிட்டோம். அதையும் தாண்டி எதிர்ப்பவர்கள் படத்தை பார்த்த பிறகு நிச்சயம் எதிர்க்க மாட்டார்கள். அதே சமயம், நீதிமன்றமோ அல்லது தணிக்கை குழுவோ இந்த தலைப்பை மாற்ற சொன்னால், நிச்சயம் வேறு ஒரு தலைப்பு வைக்க நாங்கள் தயாராகவே இருக்கிறோம். மற்றபடி, வேறு யாருடைய மிரட்டலுக்கும் அடிபணிய மாட்டோம்.” எனத் தெரிவித்துள்ளார்.

 

 

சார்ந்த செய்திகள்