Skip to main content

'அவர் அழைத்தால் எங்கிருந்தாலும் வருவேன்' - தனுஷ் 

Published on 30/07/2018 | Edited on 30/07/2018
dhanush

 

 

 

கே ப்ரொடக்ஷன்ஸ் ராஜராஜன் மற்றும் ஒய் எஸ் ஆர் பிக்சர்ஸ் யுவன் ஷங்கர் ராஜா தயாரிப்பில் ஹரீஷ் கல்யாண், ரைஸா வில்சன் நடித்திருக்கும் படம் 'பியார் பிரேமா காதல்'. இளம் இயக்குனர் இளன் இயக்கியிருக்கும் இந்த படத்துக்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்திருக்கிறார். இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் மிக பிரமாண்டமாக நடைபெற்றது. இசைஞானி இளையராஜா கலந்து கொண்டு இசையை வெளியிட, தமிழ் சினிமாவின் மிக முக்கிய பிரபலங்கள் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர். அப்போது விழாவில் தனுஷ் பேசும்போது.... "எல்லா கலைஞனுக்குமே காதல் தான் ஒரு உந்துசக்தி, காதல் இல்லாமல் இந்த உலகில் எதுவுமே இல்லை. துள்ளுவதோ இளமை, காதல் கொண்டேன் படங்களின்போது நானும், செல்வராகவனும் கஷ்டப்பட்டுக் கொண்டிருந்தபோது யுவன் இசை தான் எங்கள் படங்களுக்கு அடையாளமாக இருந்தார். நான் அவருக்கு நன்றிக்கடன் பட்டிருக்கிறேன், யுவன் என் குடும்பத்தில் ஒருவர். அவர் அழைத்தால் எங்கிருந்தாலும் வருவேன் என்றார்.

 

 

 

 

 

சார்ந்த செய்திகள்