Skip to main content

தனுஷ் - கார்த்திக் நரேன் கூட்டணியில் உருவாகும் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு!

Published on 28/07/2021 | Edited on 28/07/2021

 

dhanush

 

கார்த்திக் நரேன் இயக்கத்தில், தனுஷ் நடிப்பில் உருவாகிவரும் ‘டி43’ படத்திற்கு ‘மாறன்’ எனப் பெயரிடப்பட்டுள்ளது. ‘மாஃபியா’ படத்தைத் தொடர்ந்து, நடிகர் தனுஷுடன் கூட்டணி அமைத்தார் இயக்குநர் கார்த்திக் நரேன். இக்கூட்டணியில் உருவாகிவரும் படத்தில் தனுஷிற்கு ஜோடியாக மாளவிகா மோகனன் நடிக்கிறார். சமுத்திரக்கனி, மகேந்திரன், ஸ்மிருதி வெங்கட் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துவருகின்றனர். சத்யஜோதி நிறுவனம் தயாரிக்க, ஜி.வி. பிரகாஷ் இசையமைக்கிறார்.

 

‘டி 43’ எனத் தற்காலிகமாகப் பெயரிட்டு படப்பிடிப்பைத் தொடங்கிய படக்குழு, தற்போது ஹைதராபாத்தில் இறுதிக்கட்டப் படப்பிடிப்பை நடத்திவருகிறது. இந்நிலையில், படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் இன்று (28.07.2021) வெளியிடப்பட்டுள்ளது. படத்தின் நாயகன் தனுஷ், இன்று தனது பிறந்தாளைக் கொண்டாடுகிறார். அதனை முன்னிட்டு ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரானது வெளியிடப்பட்டுள்ளது. 

 

 

சார்ந்த செய்திகள்