Skip to main content

மோகன்லால் மீது நடவடிக்கை: நீதிமன்றம் அதிரடி உத்தரவு

Published on 10/06/2022 | Edited on 10/06/2022

 

court new order mohanlal illegal ivory possession case elephant tusk

 

கடந்த 2012 ஆம் ஆண்டு நடிகர் மோகன் லாலுக்கு சொந்தமான வீடு அலுவலகங்கள் ஆகியவற்றில் வருமான வரித்துறையினர் அதிரடி சோதனை நடத்தினர். அதில் கொச்சியில் உள்ள மோகன் லாலின் வீட்டில் 4 யானை தந்தங்கள் கைப்பற்றப்பட்டன. இதுகுறித்து வனத்துறையினர் மோகன்லாலிடம் நடத்திய விசாரணையில் யானை வளர்ப்பவர்களிடம் இருந்து வாங்கியதாக தெரிவித்தார். 

 

இதையடுத்து வனவிலங்கு பாதுகாப்பு சட்டம் மீறப்பட்டிருப்பதாகவும், வனத்துறையினரே அதற்கு உடந்தையாக இருந்ததாகவும் குற்றம்சாட்டப்பட்டது. அத்துடன் மோகன்லால் எதிராக கேரளா நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு  பல வருடங்களாக விசாரணை நடைபெற்று வருகிறது. 

 

இந்நிலையில் இவ்வழக்கில் பெரும்பாவூர் நீதிமன்றத்தில் கேரள அரசின் வாபஸ் மனுவை நிராகரித்துள்ளது. அத்துடன் நடிகர் மோகன்லால் மீது மேல் நடவடிக்கை எடுக்கவும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

 

 

சார்ந்த செய்திகள்