இந்தியாவின் 75 வது சுதந்திர தின விழா நேற்று (15.8.2022) கொண்டாடப்பட்டது. இதனையொட்டி கடந்த ஒரு வார காலமாகவே மத்திய அரசு இதற்கான முன்னேற்பாடுகளை கவனித்து வந்தது. அதன் ஒரு பகுதியாக பிரதமர் மோடி நாட்டு மக்கள் அனைவரும் 13ஆம் தேதி முதல் 15 ஆம் தேதி வரை வீடுகளில் தேசியக் கொடியை பறக்க விட வேண்டும் என்றும், தங்களது சமூக வலைத்தள பக்கத்தில் தேசியக் கொடியை முகப்பு படமாக வைக்கவும் கோரிக்கை வைத்தார். அதனை ஏற்று திரை பிரபலங்கள், நாட்டு மக்கள் எனப் பலரும் தங்களது முகப்பு படத்தை மாற்றியும், வீடுகளில் தேசியக் கோடியை ஏற்றியும் வைத்தனர்.
அதேபோல் நேற்று சுதந்திர தினத்தை முன்னிட்டு அரசியல் கட்சித் தலைவர்கள், திரை பிரபலங்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வந்தனர். இந்நிலையில் பிரபல ஒளிப்பதிவாளர் பி.சி ஸ்ரீராம், தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்ட கருத்து வைரலாகி வருகிறது.
அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், 'என் தேசத்தை நேசிக்கிறேன், ஆனால் அரசாங்கத்தை அல்ல, ஜெய் ஹிந்த்' என்று பதிவிட்டுள்ளார். இந்த பதிவுக்கு ஆதரவாகவும், எதிராகவும் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
I love my country but not the government.
Jaihind— pcsreeramISC (@pcsreeram) August 15, 2022