சிவகங்கையை பூர்விகமாக கொண்ட கஞ்சா கருப்பு சென்னையில் மதுரவாயில் விடுதியில் வாடைக்கு வீடு எடுத்துள்ளார். 2021 முதல் இதில் வசித்து வருவதாகவும் சென்னையில் படப்பிடிப்பு இருக்கும் போது இந்த வீட்டில் தங்குவதாகவும் கூறப்படுகிறது.
இந்த சூழலில் கஞ்சா கருப்பு ஊரில் இல்லாத சமயத்தில் வீட்டின் உரிமையாளர் பூட்டை உடைத்து வேறு ஒருவருக்கு வாடகை விட முயற்சித்ததாக கஞ்சா கருப்பு மதுரவாயல் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். மேலும் வீட்டில் தனது உடைமைகள் இருக்கும்போது தனக்கு தெரியாமல் அத்துமீறி வீட்டின் பூட்டை உரிமையாளர் உடைத்ததாகவும் வீட்டில் வைத்திருந்த கலைமாமணி விருதையும் காணவில்லை என்றும் குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பாக வீட்டிற்கு சென்று காவல் துறையினர் விசாரணை நடத்தினர்.
இந்த நிலையில் வீட்டின் உரிமையாளர் கஞ்சா கருப்பு மீது காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். அவர், கஞ்சா கருப்பு ரூ.3 லட்சம் வாடகை பாக்கி வைத்துள்ளதாகவும், வீட்டை வேறு ஒரு நபருக்கு உள்வாடகைக்கு விட்டு, மதுபானம் மற்றும் தகாத சம்பவங்கள் நடத்துவதாகவும் புகாரில் குறிப்பிட்டுள்ளார்.