![vikram](http://image.nakkheeran.in/cdn/farfuture/RlWu4bQAcXOSastRx5XE7CJsQlS2tQLkEbiwDQEQ4pU/1533347552/sites/default/files/2018-03/201803192132154263_1_vikram-2._l_styvpf.jpg)
![vikram](http://image.nakkheeran.in/cdn/farfuture/HCUcdmuJ1mJnyeQfAO0BxYYl0FoVW8Ec5HQUyoi_0bw/1533347552/sites/default/files/2018-03/201803192132154263_air-hostess-pleasant-shock-to-vikram_secvpf.gif)
![vikram](http://image.nakkheeran.in/cdn/farfuture/cWmKt_-0nS0bbEVHGtZjFFirryX86j-jwq1-fu9oQFw/1533347554/sites/default/files/2018-03/dyovryfuqaacinh.jpg)
ஸ்கெட்ச் படத்தையடுத்து நடிகர் விக்ரம் தற்போது சாமி ஸ்கொயர் படத்தில் நடித்து வருகிறார். 2003ஆம் ஆண்டு வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற சாமி படத்தின் இரண்டாம் பாகம் ஆகும். ஹரி இயக்கி கொண்டிருக்கும் இப்படத்தில் பாபி சிம்ஹா, கீர்த்தி சுரேஷ் உள்ளிட்ட பலர் நடித்து வருகிறார்கள். இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் படப்பிடிப்பிற்காக விக்ரம் விமானத்தில் சென்றுகொண்டிருக்கும் போது விக்ரமுக்கு விமான பணி பெண்கள் இன்ப அதிர்ச்சி அளித்திருக்கிறார்கள். விமானத்தில் விக்ரம் பயணிப்பதை அறிந்த பணி பெண்கள், அவருக்கு இந்த விமானத்தில் பயணிக்கும் மிகவும் திறமையான சூப்பர் ஸ்டார் வினோத் விக்ரமுக்கு நன்றி என்று வாழ்த்து கூறிய பலகையை கேக்கின் மேல் வைத்து இனிப்பு மற்றும் ஜூஸ் கொடுத்து தன் அன்பை வெளிப்படுத்தியுள்ளனர். இதற்கு விக்ரம் நன்றி தெரிவித்து அவர்களுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டார். அது தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.