Skip to main content

'வந்தா ராஜாவாதான் வருவேன்...' சிம்பு, அரவிந்த்சாமி, அருண்விஜய் சகோதரயுத்தம்?

Published on 25/08/2018 | Edited on 25/08/2018

செக்கச் சிவந்த வானம் ட்ரைலர் - ஒரு சர்ஜரி!

 

chekka chivantha vaanam 1



விஜய் சேதுபதி வாய்ஸ் ஓவர்ல, சென்னை சென்ட்ரல் ஸ்டேஷனோட டாப் ஆங்கிள் ஷாட்டோட ஆரம்பிக்குது செக்கச் சிவந்த வானம் ட்ரைலர். 'கிரிமினலுக்கு நம்மூர்ல ஏகப்பட்ட பேரு தொழிலதிபர், கல்வித் தந்தைன்னு ஒரு பெரிய லிஸ்ட் போட்டு கடைசில சேனாபதி'னு சொல்லி நிக்குறாரு. பிரகாஷ்ராஜ்தான் அந்த சேனாபதி. பிரகாஷ்ராஜ் எவ்வளவு பெரிய கிரிமினல்னு இதுலயே ஒரு சூப்பர் அறிமுகம் கொடுத்துடறாங்க. ஒரு பக்கா ஆக்சன் படம்னு ஆரம்பத்துலயே நம்ம மைண்டை செட் பண்ணிடறாங்க.

 

chekka chivantha vaanam prakash raj



ஒரு கார்ல, ஏற்கனவே இறந்து போன ஒருத்தர் பக்கத்துல ஒரு வெடிகுண்டை டெட்டோனேட் பண்ற மாதிரி ஒரு காட்சி வருது. எந்த ஆதாரமும் கிடைக்கக் கூடாதுன்னு வெடிக்க வைக்கற மாதிரி தெரியுது. பின்னாலயே போலீஸ் வண்டி வேற ஒன்னு நிக்குது. அதுக்கடுத்ததா காற்று வெளியிடை படத்தில் நடிச்ச அதிதி ராவ், ரிப்போர்ட்டரா, கோர்ட் வாசல்ல, மைக்க பிடிச்சுட்டு 'யார் இந்த சேனாபதி'ன்னு ஆவேசமா பேசிட்டு இருக்காங்க... 'ராபின்ஹுட்டா?'ன்னு வேற கேக்குறாங்க.. பிரகாஷ்ராஜ் கழுத்துல பேண்ட் (band) மாட்டிகிட்டு சிரிச்சுகிட்டே நடந்து வர்றாரு. வீட்ல ஏதோ விசேஷம் மாதிரி இருக்கு.

 

chekka chivantha vaanam 3



கார்ல ஒருத்தர் இறந்து கிடந்தார்னு பாத்தோம் இல்லயா... அவரை சுட்டது ஒரு போலீஸ்காரர்தான் என்று காட்டும் காட்சி பின் வருகிறது. 'சேனாபதிக்கு ஏதாவது ஒன்னுன்னா யார்கிட்ட பஞ்சாயத்து பண்றது?'ன்னு தியாகராஜன் கேட்குற கேள்விக்கு ‘நான்தான்.. வேற யாரு’ னு கேட்டு ட்ரெய்லரில் அறிமுகம் ஆகுறாரு அரவிந்த்சாமி.

 

chekka chivantha vaanam adhithi rao



பிரகாஷ்ராஜோட மூத்த பையன் வரதன் அரவிந்த்சாமி. அவரோட மனைவியா ஜோதிகா வர்றாங்க. ஆனா  அதிதி ராவ் கூட அரவிந்த்சாமி ரொமான்டிக்கா இருக்கற மாதிரி ஒரு காட்சியும் வேற ட்ரைலர்ல இருக்கு. போஸ்டர்ல கூட இத காட்டிருந்தாங்க. என்ன கதை இதுன்னு படத்துலதான் பாக்கனும். கூடவே, 'தம்பிங்க ரெண்டு பேரும் படிச்சவங்க... எதுவும் தப்பா இறங்க மாட்டாங்க'ன்னும் சொல்றாரு.

 

arvind swamy jothika



யார் அந்த தம்பிங்கன்னு பார்த்தால், முதல் தம்பி தியாகு, நம்ம அருண்விஜய். அவரோட மனைவி ஐஸ்வர்யா ராஜேஷ். 'அவருக்கு ரெண்டு முகம் இருக்கு. ஒன்னு பாசமா நல்லா கவனிச்சுக்கற முகம். ஆனா இன்னொரு முகம் வேற மாதிரி இருக்கும்'னு சொல்றாங்க. அடுத்த ஷாட்லயே அருண்விஜய், அரவிந்த்சாமியோட சேர்ல சாஞ்சு உக்கார்றாரு. ஜோதிகா, 'அது பெரியவர் சேர்'னு சொல்ல, 'அண்ணன்ட்ட சொல்லாதீங்க'ன்னு நக்கலா சிரிச்சுக்கிட்டே சொல்றாரு. கொஞ்சம் விவகாரமான கேரக்டர் போல தெரியுது அருண் விஜய் கேரக்டர்.

 

arun vijay



அடுத்ததா ட்ரைலர்ல காட்றது, கடைக்குட்டி 'எத்தி', நம்ம சிம்பு. செமயா ஒரு கார் சேசிங்ல அறிமுகம்  ஆகுறாரு. அவரோட செர்பியன் லவ்வர ஏன் கூட்டிட்டு வரலன்னு அவங்க அம்மா கேக்குறாங்க. 'நானே வீட்டுக்கு வேண்டாத பையன்...  பெரியவர்ட்ட என்ன சொல்றது?'ன்னு கேக்குறாரு சிம்பு. அவர் லவ்வர் பேரு சாயா. அப்பாவ எல்லாரும் பெரியவர்னு கூப்பிடுவது, மூனாவது பையன் கொஞ்சம் துடுக்கா இருக்கறது, வேற ஒரு வெளிநாட்டு பொண்ண லவ் பண்றது இது எல்லாமே லைட்டா காட்ஃபாதர் சாயலில் இருக்கு.

 

str



சிம்பு வெறும் ரொமான்ஸ் மட்டும் பண்ணல. அடுத்தடுத்த காட்சிகளில் துப்பாக்கியுடன்தான் வலம் வருகிறார். வெளிநாட்ல ஒருத்தர சுடுறாரு. பெரும்பாலும் செர்பியாவா இருக்க வாய்ப்பிருக்கிறது. அடுத்து, சென்னைல, அண்ணன்களோட கார்ல போய்ட்டு இருக்கும்போது, 'இந்த மண்ணுதான் பிசினஸ்னு அரவிந்த்சாமிகிட்ட துப்பாக்கியை எடுத்துக் காட்றாரு. 'வந்தா ராஜாவா தான் வருவேன், ராஜாவுக்கு 100 தோஸ்த்து'ன்னு பீச்ல விளையாடிட்டே ஒரு டயலாக் பேசுறாரு சிம்பு. இதுல ராஜான்னு குறிப்பிடுவது பிரகாஷ்ராஜ்க்கு அப்பறம் யாரு என்ற இடத்தையா என்பதைப் படத்தில் பார்க்கலாம்.

 

 


மொத்த குடும்பமும் அறிமுகமான பிறகு, கடைசியில் நறுக்குனு என்ட்ரி கொடுக்குறாரு நம்ம விஜய் சேதுபதி. 'ரசூல்'ன்ற கேரக்டர்ல, நேத்து வெளியான 96 டீசர்ல லவ் பண்ணி பண்ணி நம்ம மனச தொட்ட 'ராம்' கேரக்டருக்கு அப்படியே எதிர்மறையா போலீஸ்காரரா வர்றாரு. ரூல்ஸ மதிக்காத ஒரு போலீஸ்காரர்ன்றத ட்ரைலர்ல காட்டிடுறாங்க.

 

 

vijay sethupathi



அரவிந்த்சாமியும் விஜய் சேதுபதியும் நெருங்கிய நண்பர்கள் என்பதையும் ட்ரைலர்ல காட்றாங்க. போலீஸா இருக்கற விஜய் சேதுபதிக்கு கேங்க்ஸ்டர் ஆகுற ஆசையும் நோக்கமும் இருக்கற மாதிரியும் ட்ரைலர்ல காட்றாங்க. சிம்புவும் அதை அவரிடமே கேட்கிறார். விஜய் சேதுபதியோட உயரதிகாரியாக வரும் கௌதம் சுந்தர்ராஜனும் ‘வரதன் மூலமா சேனாபதி இடத்துல உக்கார பாக்குறியா?’னு கேட்குறாரு. எல்லாருக்குமே அந்த சந்தேகம் இருக்கற மாதிரி தெரியுது. 'அப்படிலாம் போக மாட்டேன் சார்'னு விஜய் சேதுபதி சொல்றதயும் கௌதம் நம்பவில்லை, நாமும்தானே? நாலு ஹீரோஸுமே ஒன்னா இருக்கற மாதிரி ஒரே ஒரு ஷாட்தான் ட்ரைலர்ல வருது. ஒரு கார் சேசிங், கார் விபத்து மாதிரி ஒரு காட்சி.

 

chekka chivantha vaanam family



அடுத்த ஷாட்லயே, 'அப்ப யுத்தம்தான் முடிவு பண்ணிட்டீங்களா?'னு ஜோதிகா கேட்குறாங்க. அடுத்தடுத்த ஷாட் முழுக்க துப்பாக்கி, சண்டை, ரத்தமா நிறைஞ்சுருக்கு. அரவிந்த்சாமி, சிம்பு, அருண் விஜய் மூனு பேருமே வெறித்தனமா சண்டை போட்டுட்டு இருக்காங்க. பிரகாஷ்ராஜ்க்கோ, இல்ல குடும்பத்துல வேற யாருக்கோ ஏதாவது ஆகி, அதுக்கு மொத்த குடும்பமே சேர்ந்து பழிவாங்குற மாதிரி இருக்கலாம். இதுக்கேத்த மாதிரி அரவிந்த்சாமி, பீச்ல வெள்ளை வேட்டி சட்டையோட நடந்து வரும் ஒரு காட்சி இருக்கு. திதி கொடுத்துட்டு வரலாம். ஆரம்பத்துல இருந்தே பிரகாஷ்ராஜ் கேரக்டர பார்க்கும்போது காட்ஃபாதர் மார்லன் ப்ராண்டோ, நாயகன் கமல் நினைவு வருகிறது. ஒரு காரை ஒரு கேங் சுத்தி வளைச்சு சுடுற மாதிரி ஒரு ஷாட்டும் இருக்கும். அந்த காரில் இருப்பது பிரகாஷ்ராஜாக இருக்கலாம்.

 

 


இதுக்கு நடுவுல துபாய் போலீஸ்ல கைதியா ஐஸ்வர்யா ராஜேஷ் மாட்டியிருக்கற மாதிரி ஒரு ஷாட் கண்ணிமைக்கற நேரத்துல வந்துட்டு போகுது. ஆரம்பத்துல அருண் விஜயும் துபாய்ல இருக்கற மாதிரிதான் காட்றாங்க. அங்க இவங்களுக்குள்ள பழக்கம் ஏற்பட்டு காதலாகி கல்யாணத்துல முடிஞ்சுருக்கலாம். ஐஸ்வர்யா ராஜேஷ் இலங்கைத் தமிழில் பேசுகிறார்.

 

 

chekka chivantha vaanam fight



இறுதியாக 'உனக்கு யாராவது பழைய ஃப்ரெண்ட் இருக்காங்களா..? நம்பாத' என்று அரவிந்த்சாமி சொல்லும்போது கட் ஷாட்டில் விஜய் சேதுபதி ஃபீல் பண்ணிக்கொண்டு இருப்பதை காட்டுகிறார்கள். என்னதான் நண்பனா இருந்தாலும், கடமைதான் முக்கியம்னு, மனச கல்லாக்கிட்டு விஜய் சேதுபதி அரவிந்த்சாமிய போலீஸ்ல புடுச்சுக் கொடுத்துட்டாரா, இல்லை வேறு ஏதாவது அவர் பண்ணப் போய் , அதை அரவிந்த்சாமி துரோகமென்று தப்பா புரிஞ்சுகிட்டாரான்னு தெரியல.

 

 


மணிரத்னம் இயக்கம், ஏ.ஆர்.ரகுமான் இசை, இத்தனை ஹீரோஸ்.. இந்த அத்தனை எதிர்பார்ப்பையும் பூர்த்தி செய்வது  போல வந்திருக்கிறது 'செக்கச் சிவந்த வானம்' ட்ரைலர். லேசா காட்ஃபாதர், நாயகன், கேங்க்ஸ் ஆஃப் வசீபூர், ரேஸ் போன்ற படங்களின் சாயல் தென்பட்டாலும், மணிரத்னம் நிச்சயம் நமக்கு இதெல்லாம் தாண்டி வேற மாதிரி ஒரு படத்தை, அனுபவத்தைக் கொடுப்பாரென்று நம்புவோம்.
 

வீடியோ வடிவில் செக்கச் சிவந்த வானம் படத்தின் ட்ரைலர் ரிவ்யூவைப் பாருங்கள்...

 

 

 

சார்ந்த செய்திகள்