கடந்த அக்டோபர் மாதம் நடந்த கார்த்தி 25 விழாவில், கார்த்தி இந்த சமூகத்திற்கு வெவ்வேறு தளங்களில் உதவும் வகையில் ஒரு கோடி ரூபாய் உதவித் தொகை அறிவித்தார். அதில் 25 சமூக செயற்பாட்டாளர்களின் செயல்களைக் கெளரவப்படுத்தும் விதமாக தலா 1 லட்சம் வீதம் 25 லட்சம் அளிக்க திட்டமிடப்பட்டுள்ளது. தங்கள் மேன்மையான சேவைக்காக ஊக்கத்தொகை பெரும் 25 சமூக செயல்பாட்டாளர்கள் பற்றிய விவரம் மற்றும் செயல்பாடுகள்.
1. அமுதவள்ளி- பழங்குடிகள் செயல்பாட்டாளர்
2. அசினா - திருநங்கைகள் செயல்பாட்டாளர்
3. ரவி- மலைவாழ் மக்களுக்கான உதவியாளர்
4. தெய்வராஜ்- மனநலம் குன்றிய மக்களுக்கான செயல்பாட்டாளர்
5. சுதாகர் - வித்யாலெட்சுமி தம்பதியர் - எளிய மக்களுக்கு உணவளிப்பவர்கள்
6. செரினா- இருளர் குழந்தைகள் செயல்பாட்டாளர்
7. சு. பாரதிதாசன்- சுற்றுச்சூழல் செயல்பாட்டாளர்
8 புஹாரி ராஜா - சமூக ஊடக செயல்பாட்டாளர்
9. நாகராஜ் - கிராமப்புற சுய உதவிக்குழுக்கள் ஒருங்கிணைப்பாளர்
10. அ.ரபேல்ராஜ் - பழங்குடியினருக்காக கல்வி செயல்பாட்டாளர்
11. டெய்சிராணி- கிராமப்புற சுகாதார செயல்பாட்டாளர்
12. விஜய் (எ) விஜயகாந்த்- விலங்கு நல ஆர்வலர்
13. ஜோஷ்வா -பழங்குடி செயல்பாட்டாளர்
14. மணிகண்டன் - கிராமப்புற மாணவர்களுக்கான விளையாட்டு பயிற்சியாளர்
15. ஆறுமுகம் - சமூக செயல்பாட்டாளர்
16. சந்துருகுமார் - இரத்ததான ஒருங்கிணைப்பாளர்
17. பாக்கியலெட்சுமி - ஆதரவற்ற பெண்களுக்கான செயல்பாட்டாளர்
18. மஞ்சரி - ஊர் கிணறு புனரமைப்பாளர்
19 . மதுமிதா கோமதிநாயகம் - மாற்றுத் திறனாளிகள் செயல்பாட்டாளர்
20. தேவி- குழந்தைகள் செயல்பாட்டாளர்
21. உறவுகள் அறக்கட்டளை - அமரர் செயல்பாட்டாளர்கள்
22. வியாசை தோழர்கள் - கல்வி மற்றும் பேரிட செயல்பாட்டாளர்கள்.
23. ஹரி கிருஷ்ணன் - தமிழ்நாடு தன்னார்வலர்கள் ஒருங்கிணைப்பாளர்
24. V. P. குணசேகரன் - சமூக செயல்பாட்டாளர்.
25. டெரிக் ஹட்சன் - விளையாட்டுத் துறை செயல்பாட்டாளர்