தனியார் தொலைக்காட்சியில் கமல் தொகுத்து வழங்கும் நிகழ்ச்சி பிக்பாஸ். இந்த நிகழ்ச்சி கடந்த இரண்டு சீசனைப் போலவே சீசன் 3யும் மக்கள் மத்தியில் பிரபலமாக போய்க்கொண்டிருக்கிறது. பிக் பாஸ் சீசன் 3ல் மொத்தம் 16 போட்டியாளர்கள் பங்கேற்றனர். இந்த நிகழ்ச்சியில் பாத்திமா பாபு, மோகன் வைத்யா, வனிதா, மீரா மிதுன் மற்றும் ரேஷ்மா இதுவரை போட்டியிலிருந்து வெளியேறியுள்ளனர். இந்த நிலையில் நடிகர் சரவணன் திடீரென்று பிக் பாஸ் வீட்டிலிருந்து வெளியேற்றப்பட்டார். இதற்கு பெண்களை பற்றிய சரவணன் தெரிவித்த கருத்தே காரணம் என்று சொல்லப்பட்டது. வெளியேறும் போது கன்ஃபெஷன் ரூமின் மற்றொரு கதவு வழியாக அழைத்து செல்லப்பட்டார்.
அப்போது சரவணனின் கண்களை கறுப்புத் துணியால் கட்டி, அழைத்து சென்றனர் நிகழ்ச்சி குழுவினர். வரும் சனிக்கிழமை சரவணன் வெளியேற்றப்பட்ட முழு காரணம் தெரியும் என்று கூறிவருகின்றனர்.
இந்நிலையில் வெளியே வந்த பின்னர் சரவணன் “நான் கூறிய கருத்திற்கு பகிரங்கமாக மன்னிப்பு கேட்டும் பிக்பாஸ் ஏற்பாட்டாளர்கள் இப்படி செய்தது வேதனை அளிக்கிறது. கல்லூரி காலத்தில் தவறாக நடந்தது உண்மை தான், ஆனால் நிகழ்ச்சிக்கு அதற்காகவா சென்றேன். நான் பெண்களிடம் அங்கு கண்ணியமாக தான் நடந்து கொண்டேன்” என வருந்தி புலம்பி வருவதாக அவருடைய நெருங்கிய வட்டாரங்கள் தெரிவித்து வருகின்றனர்.