பாடகி சின்மயி சமீபத்தில் கவிஞர் வைரமுத்து மீது பாலியல் புகார் அளித்ததை தொடர்ந்து பாடகி புவனா சேஷன் என்பவரும் தன்னை வைரமுத்து தவறாக அழைத்தார் என்று #MeToo வில் பாலியல் புகார் கூறி சின்மயிக்கு ஆதரவு தெரிவித்திருந்தார். இந்நிலையில் அவர் மீண்டும் #MeToo குறித்து தற்போது பேசியுள்ளார். அதில்...
"எனக்கு நடந்த தவறை சொல்ல என் மகன் எனக்கு அளித்த நம்பிக்கைக்கு பிறகு தான் வெளியில் சொல்ல எனக்கு தைரியம் வந்தது. வைரமுத்து மட்டுமே இவ்வாறு நடந்துகொண்டதாக கூறவில்லை. இன்னும் சிலரும் இப்படி பெண்களை படுக்கைக்கு அழைக்கத்தான் செய்கின்றனர். அனால் அதில் பெரும்பாலானோர் படுக்க மறுத்ததும் அமைதியாக சென்றுவிடுவார்கள். ஆனால் நான் வைரமுத்து மீது மட்டும் குற்றம்சொல்ல காரணம் அவர் மட்டும்தான் நான் அவரின் ஆசைக்கு இணங்காததால் எனக்கு வந்த அத்தனை பாடல் பாடும் வாய்ப்பையும் தொடர்ந்து பலவழிகளில் தடுத்தார். மேலும் இதேபோல் பாதிக்கப்பட்ட மற்ற பெண்களும் இதை வெளியில் சொல்லவேண்டும்" என்றார்.