92வது ஆஸ்கர் விருது விழா லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் கோலாகலாமான கொண்டாட்டத்துடன் நடந்து முடிந்தது. முழுக்க முழுக்க அயல்நாட்டு திரைப்படமான ‘பாரசைட்’ ஆறு விருதுகளுக்கு பரிந்துரைக்கப்பட்டு, நான்கு விருதுகளை தட்டிச் சென்றது. ஆஸ்கர் வரலாற்றில் அயல்நாட்டு திரைப்படங்கள் பல விருதுகளுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது ஆனால் எதுவும் பாரசைட் படம் போல விருதுகளை குவித்தது இல்லை.
இந்நிலையில் கடந்த வருடத்தில் உலகம் முழுவதும் வசூலை வாரிக்குவித்த படமான அவெஞ்சர்ஸ் எண்ட்கேம் படம் ஆஸ்கரை அள்ளிக் குவிக்கும் என்று மார்வெல் ரசிகர்களால் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், பரிந்துரைகளின் லிஸ்ட்டை பார்க்கும்போதே அவர்களுக்கு அதிர்ச்சியானது. ஆமாம், விஎஃப்எக்ஸ் பிரிவிற்காக மட்டுமே பரிந்துரைக்கப்பட்டது. கண்டிப்பாக விஎஃப்எக்ஸிற்கு விருது வாங்கிவிடும் என்று நம்பிய நெஞ்சங்களை பதறவைத்துவிட்டது ‘1917’ படம். ஆமாம், 1917 படத்திற்குதான் சிறந்த விஎஃப்எக்ஸிற்கான ஆஸ்கர் கிடைத்தது.
இதன் மூலம் அவெஞ்சர்ஸ் எண்ட் கேம் படம் ஒரு சாதனையை புரிந்துள்ளது அது என்ன என்றால். உலகம் முழுவதும் அதிக வசூல் செய்த படங்களில் முதலிடம் இருக்கும் படம் ஆஸ்கர் விருது விழாவில் ஒரு விருதையாவது பெற்றுவிடும். கடந்த வருடம் வெளியான அவெஞ்சர்ஸ் எண்ட் கேம் படம் உலக வசூல் சாதனையில் முதலிடம் இருக்கும் அவதாரின் இடத்தை பிடித்தது. இருந்தபோதிலும் ஆஸ்கரில் ஒரு விருதையும் பெறாமல் மார்வெல் ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை அளித்துள்ளது. உயிருக்கு உயிரான் மார்வெல் ரசிகர்கள் சிலர் ஆஸ்கர் கமிட்டியை சமூக வலைதளத்தில் நடிகரும் இயக்குனருமான பார்த்திபனை போல கிழி கிழி என கிழித்து தொங்கவிட்டு கொண்டிருக்கின்றனர்.