Skip to main content

கேப்டன் அமெரிக்கா 6 நிமிஷம், தானோஸ் 29 நிமிஷம்...தோர், அயர்ன் மேன் எவ்வளவு நேரம்?

Published on 30/03/2019 | Edited on 30/03/2019

அவெஞ்சர்ஸ்: எண்ட் கேம் திரைப்படம் அடுத்த மாதம் 26ஆம் தேதி ரிலீஸாகிறது. இந்த படத்திற்கான இரண்டு ட்ரைலர்கள் வெளியாகி உலகம் முழுவதும் உள்ள ரசிகர்களிடையே நல்ல எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
 

avengers

 

 

இந்த முறை அவெஞ்சர்ஸ் டீமின் முக்கிய சூப்பர் ஹீரோக்களான அயர்ன் மேன், கேப்டன் அமெரிக்கா, தோர், ஹல்க், பிளாக் விடவ், ஹாக் ஐ இவர்களுக்குதான் இந்த பார்ட்டில் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளதாக மார்வெல் ஸ்டூடியோஸ் தயாரிப்பாளர் கெவின் ஃபீஜ் தெரிவித்திருக்கிறார்.
 

சொல்லப்போனால் எத்தனை ஹீரோக்கள் அவெஞ்சர்ஸ் படத்தில் வந்தாலும் இந்த ஆறு பேருக்கு இருக்கின்ற மாஸ் வேறு யாருக்கும் இல்லை என்று சொல்லலாம். தயாரிப்பாளர் இவ்வாறு தெரிவித்துள்ளது மார்வெல் ரசிகர்களுக்கு மிகவும் சந்தோஷத்தை ஏற்படுத்தியுள்ளது. ஏனென்றால் கடந்த பாகத்தில் ஹாக் ஐ கதாபாத்திரமே இடம்பெறவில்லை. பிளாக் விடவ், கேப்டன் அமெரிக்கா, ஹல்க் உள்ளிட்ட ஹீரோக்களுக்கும் குறுகிய நேரங்களிலேயே இடம் பெற்றிருந்தனர். என்னதான் பழைய பார்ட் செம ஹிட் என்றாலும், முக்கிய கதாபாத்திரங்களின் நேரமின்மை ரசிகர்களுக்கு பெரும் ஏமாற்றமாகவே இருந்தது.
 

கடந்த பாகம் தானோஸ் படம்  என்று சொல்லப்பட்டாலும், ஒரு கூட்டத்தின் தலைவனாக தெரியப்பட்ட கேப்டன் அமெரிக்கா இடம்பெற்ற நேரம் எவ்வளவு தெரியுமா? 6 நிமிடங்கள் 45 நொடிகள்தான். யோசித்து பாருங்கள் 2 மணி நேரம் 40 நிமிடங்கள் ஓடக்கூடிய அவெஞ்சர்ஸ்: இன்ஃபினிட்டி வாரில் கேப்டன் அமெரிக்கா வந்துபோகும் நேரம் 6 நிமிடங்கள் 45 நொடிகள்தான். 
 

சரி, அவெஞ்சர்ஸ் இன்ஃபினிட்டி வார் திரைப்படத்தில் வரும் முக்கிய கதாபாத்திரங்களும், அவர்கள் எவ்வளவு நேரம் இடம்பெற்றிருக்கிறார்கள் என்பதையும் பார்ப்போம்...
 

தானோஸ்- 29 நிமிடங்கள்

கமோரா- 19 நிமிடங்கள் 30 நொடிகள்

டோனி ஸ்டார்க்- 18 நிமிடங்கள்

தோர்- 14 நிமிடங்கள் 30 நொடிகள்

டாக்டர் ஸ்ட்ரேஞ்- 11 நிமிடங்கள் 30 நொடிகள்

ஸ்டார் லார்ட்- 10 நிமிடங்கள் 15 நொடிகள்

விஸன்- 9 நிமிடங்கள் 45 நொடிகள்

ஸ்கார்லெட் விட்ச்- 9 நிமிடங்கள்

தி ஹல்க்- 8 நிமிடங்கள் 45 நொடிகள்

ஸ்பைடர் மேன்- 7 நிமிடங்கள் 30 நொடிகள்

ஸ்டீவ் ராஜர்ஸ்- 6 நிமிடங்கள் 45 நொடிகள்

ராக்கெட்- 6 நிமிடங்கள்
 

 

 

சார்ந்த செய்திகள்