Skip to main content

டைட்டானிக்கின் பத்து வருட சாதனையை முறியடித்த அவெஞ்சர்ஸ்...

Published on 06/05/2019 | Edited on 06/05/2019

கடந்த வருடம் அவெஞ்சர்ஸ் இன்ஃபினிட்டி வார் படம் வெளியான பின்பு அனைவரும் தானோஸை பற்றி பேசாமல் இல்லை. மீம்ஸ் தொடங்கி வீடியோக்கள் வரை தானோஸ் என்ற வில்லன் கதாபாத்திரம் பேசப்பட்டது. உலகையே காப்பாற்றிய அவெஞ்சர்ஸ் டீமையே அடித்து நொறுக்கினால் யார்தான் தானோஸை பற்றி பேசாமல் இருப்பார்கள். அப்படிப்பட்ட தானோஸிடம் இருந்து உலகை எப்படி காப்பாற்றப்போகிறார்கள் என்பதுதான் அவெஞ்சர்ஸ் எண்ட கேம் படத்தின் கதை.
 

avengers

 

 

ஹாலிவுட் படமாக இருந்தாலும், அனைத்து மொழி பேசும் மக்களிடமும் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வசூல் வேட்டையில் இறாங்கியுள்ள படம்தான் அவெஞ்சர்ஸ் எண்ட் கேம். இந்தியாவில் மட்டும் சுமார் 400 கோடி வசூலை வாரிக்குவிக்கும் என்று எதிர்ப்பார்க்கப்பட்டது.
 

இந்நிலையில் படம் வெளியாவதற்கு முன்பே டிக்கெட் முன்பதிவில் உலகம் முழுவதும் பல நாடுகளில் சாதனை படைத்தது. குறிப்பாக இந்தியாவில் ஒரு நாளுக்கு பத்தலட்சத்திற்கு மேலான டிக்கெட்கள் விற்பனை செய்யப்பட்டிருந்தது. நொடிக்கு 16 டிக்கெட்டுகள் என்ற வீதம் விற்று தீர்ந்துள்ளது. உலகம் முழுவதும் முதல் நாள் பாக்ஸ் ஆஃபிஸ் என்று பார்த்தால் 169 மில்லியன் வசூல் செய்திருக்கிறது என்று சொல்லப்படுகிறது. இந்திய மதிப்பில் சுமார் 1,186 கோடி. இந்தியாவில் மட்டும் 50 கோடிக்கு மேல் முதல் நாள் வசூல் செய்திருந்ததாக சொல்லப்பட்டது.
 

தற்போது உலகம் முழுவதும் இரண்டு பில்லியன் அமெரிக்க டாலர்களை தாண்டி வசூல் செய்துள்ளதாகவும் மேலும் வசூல் செய்ய வாய்ப்புள்ளதாகவும் தகவல்கள் வெளியாகின. உலகளவில் அதிகம் வசுலித்த படங்களில் இரண்டாவது இடத்திலிருந்த டைட்டானிக் படத்தின் வசூல் சாதனை இப்படம் முறியடித்துள்ளது. முதல் இடத்தில் இருக்கும் அவதார் படத்தின் வசூல் சாதனை விரைவில் முறியடிக்கும் என்று சொல்லப்படுகிறது.

 

 

டைட்டானிக் வெளியான 1994ஆம் ஆண்டில் 2 பில்லியனுக்கு மேல் வசூல் செய்து முதலிடத்தை பல வருடங்களாக தக்க வைத்திருந்தது. பின்னர் அவதார் வெளியானதும் முதலிடத்திலிருந்து தற்போதுவரை 10 வருடங்களாக இரண்டாம் இடத்தை பிடித்திருந்தது. 
 

இப்படம் இந்தியாவில் இதுவரை 200 கோடிக்கு மேல் வரை வசூல் செய்துள்ளதாகவும். இந்தியாவில் வெளியான ஹாலிவுட் படங்களில் இதுவே அதிகம் வசூல் செய்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. இந்த படத்தின் பட்ஜெட் சுமார் 2500 கோடி என்பது குறிப்பிடத்தக்கது.

 

 

சார்ந்த செய்திகள்